தண்டவாளத்தில் படுத்து 3 பேர் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே செந்துறை என்ற இடத்தில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னையிலிருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், செந்துறை ரயில் நிலையத்திற்கு முன்பாக மாலை 4.30மணியளவில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் 3 பேர் தலை வைத்துப் படுத்திருப்பதைப் பார்த்தரயில் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார்.

வண்டி மிகவும் வேகமாக வந்து கொண்டிருந்ததால், உடனே பிரேக் போட்டு நிறுத்த முடியவில்லை. மிகுந்த சிரமப்பட்டுவண்டியை நிறுத்த முயன்றும் அதில் தோல்வி அடைந்தார் ஓட்டுநர். இதனால் 3 பேரின் தலை மீதும் ரயில் வேகமாக ஏறிச்சென்றது.

இதில் மூவரின் தலையும் சிதறி சம்பவ இடத்திலேயே அவர்கள் பிணமானார்கள். பின்னர் ரயில் செந்துறை ரயில் நிலையத்தில்நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் 3 பேரின் சிதறிய உடல்களையும் அப்புறப்படுத்திய பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.

போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில், செந்துறை அருகே உள்ள வஞ்சினபுரம் பகுதியைச் சேர்ந்த பானுமதி,அவரது மகள் பவித்ரா, மகன் கார்த்திக் ஆகியோர் தான் தற்கொலை செய்தவர்கள் எனத் தெரிய வந்தது.

குடும்பத் தகராறு காரணமாக மூன்று பேரும் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+