ராதாரவி மூலம் கார்த்திக்கை வளைத்த அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Karthik with Kausalya

தமிழக மீனவர்களின் நலன் கருதி கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்தியபார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் சென்னையில் கார்த்திக் வெளியிட்ட முதல் அரசியல் அறிக்கைஇது. அதில் கார்த்திக் கூறியிருப்பதாவது:

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார். தமிழக மீனவர்களின் நலன் கருதி இந்தநடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வரின் கோரிக்கை நியாயமானது. எனவே இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவ சமுதாய மக்களின் அன்றாடப் பிரச்சினை இது.

ஒன்று கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் இல்லாவிட்டால், நீண்ட கால அல்லது நிரந்தர குத்தகைக்கு எடுக்க வேண்டும்.

ரேஷன் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது நியாயமற்றது. எனவே உடனடியாகஅதை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் கார்த்திக்.

கார்த்திக்கின் முதல் அரசியல் அறிக்கை, முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை வழிமொழிவது போல இருப்பதுகுறிப்பிடத்தக்கது.

தனிக் கட்சி ஆரம்பிக்க இருந்த கார்த்திக்கை தடுத்தது ஜெயலலிதா தான் என்று கூறப்படுகிறது. பார்வர்ட் பிளாக்கிலேயேதொடருமாறு நடிகர் ராதாரவி மூலமாக ஜெயலலிதா கோரியதாகவும், அதை கார்த்திக் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வரும் தேர்தலிலும் அதிமுக கூட்டணியிலேயே பார்வர்ட் பிளாக் நீடிக்கவுள்ளது. அதன் பொதுச் செயலாளர்சந்தானத்துக்கு ஒரு தொகுதியையும் கார்த்திக்குக்கு ஒரு தொகுதியையும் அதிமுக ஒதுக்கவுள்ளதாகத் தெரிகிறது.

கார்த்திக் தனிக் கட்சி தொடங்கினால் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைப் பிரிப்பார் எனத் தெரியவந்ததால்,அந்த ரிஸ்கை தவிர்க்க கார்த்திக்குடன் சமாதானமாகச் செல்ல அதிமுக முடிவெடுத்துவிட்டது.

முதலில் மன்னார்குடி வகையறா மூலமாக கார்த்திக் அரசியலுக்கு வரக் கூடாது என்று மிரட்டப்பட்டார். ஆனால், அவர் பணியமறுக்கவே பார்வர்ட் பிளாக்கை உடைக்க வேண்டாம், அதிலேயே தொடருங்கள், கூட்டணியும் வைப்போம், சீட் தருகிறோம்என்று சமாதானம் பேசப்பட்டுள்ளது.

இந்த சமாதானத் திட்டத்தில் போயஸ் கார்டனுக்கும் கார்த்திக்குக்கும் இடையே தூதராகச் சென்று காரியத்தை முடித்தது நடிகர்ராதாரவி என்று கூறப்படுகிறது.

ஆக, வரும் தேர்தலில் நடிகர் விஜய்காந்த் தவிர நடிகர் கார்த்திக்கையும் திமுக கூட்டணி சமாளித்தாக வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+