கருணாநிதி மீது மேலும் ஒரு வழக்கு!!!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக திமுக தலைவர் கருணாநிதி மீது மேலும் ஒரு வழக்கைதமிழக அரசு இன்று தொடர்ந்தது.

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மேலும் ஒரு வழக்குப் பதிவாகியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில், அரசு வழக்கறிஞர் பி.வி.கணேஷ் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி சென்னையில் நடந்த இப்தார் நோன்பு விருந்தில்கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருணாநிதி பல கருத்துக்களைத்தெரிவித்துள்ளார். இதன் மூலம் முதல்வர் பதவிக்கும், முதல்வரின் நற்பெயருக்கும் அவர் பெரும் இழுக்கு ஏற்படுத்தியுள்ளார்.

எனவே அவதூறு சட்டத்தின் கீழ் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்குவியாழக்கிழமை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

தேர்தல் வரவுள்ள நிலையில் எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது வழக்குகளைப் போட்டு அவர்களை கோர்ட்டுக்கு அலைய வைத்து,அவர்களது பிரச்சாரத் திட்டத்தை சீர்குலைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அந்த வகையில் கருணாநிதி மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவாகி வருகின்றன. ஏற்கனவே சென்னை மேம்பால ஊழல்வழக்கு, இந்துக்களின் மனம் புண்படும்படியாக பேசியது, அமராவதி ஆற்றுப் பாலம் தொடர்பான வழக்கு என 3 வழக்குகள்போடப்பட்டுள்ளன.

இந் நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+