விடுதலைப் புலிகளுக்கு ராஜபக்ஷே எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே எச்சரிக்கைவிடுத்துள்ளார்.இலங்கையின் தெற்குப் பகுதியில் கழுத்துரை பகுதியில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய அதிபர், புத்தரின் அகிம்சைக்கொள்கையில் பற்று உள்ளவன் என்பதால் கடுமையான முடிவுகளை எடுக்க மாட்டேன் என்று என்னைத் தப்பு கணக்குப் போடவேண்டாம்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது என்னுடைய கடமை. அதே போல நாட்டின் அமைதியை எந்த சக்தியாலும்குலைக்காதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் எனது கடமை. அதிலிருந்து நான் சிறிதும் பிறழ மாட்டேன்.
அதே வேளையில், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு காண இலங்கை அரசு தயாராக உள்ளதுஎன்றார்.












Click it and Unblock the Notifications