For Daily Alerts
4 மாத குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்
மதுரை:
திருமங்கலம் அருகேயுள்ள சாத்தான்குடி கிராமத்தில் ஒரு பெண் தனது 4 மாத பெண் குழந்தையை வீட்டில் படுக்க வைத்து விட்டுகதவைப் பூட்டாமல் வெளியில் சென்றார்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய் ஒன்று குழந்தையை கடித்து குதறியது. குழந்தையின் கதறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நாயின் பிடியில் இருந்து குழந்தையை மீட்டனர்.
நாய் கவ்வியதால் பெண் குழந்தையின் முகம் மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே குழந்தையை அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தாலும்குழந்தையின் நிலை ஆபத்ததாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |