சொத்து: திமுக அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

சொத்து குவிப்பு வழக்கில் திமுகவைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதி மீது 4,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதி, கடந்த 1991 முதல் 1996 வரையிலான அதிமுக அரசில் அமைச்சராக இருந்தார்.அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.17 கோடியே மதிப்பில் சொத்து குவித்ததாக திமுக ஆட்சியில் வழக்குதொடரப்பட்டது.

இது தொடர்பாக புதுக் கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்கில்ரகுபதி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்ட் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) தமிழரசிமுன்னிலையில் 4,000 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

கடந்த திமுக ஆட்சியில் இந்த வழக்குப் போடப்பட்டாலும் பின்னர் திமுகவுக்கு வந்துவிட்ட ரகுபதி மத்திய அமைச்சராக உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+