எனது போனை ஒட்டு கேட்கிறது தமிழக அரசு: ராமதாஸ் குண்டு
திண்டிவனம்:
எனது தொலைபேசியை தமிழக அரசு ஒட்டுக் கேட்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.
இந்தியாவில் இப்போது தொலைபேசி ஒட்டுக் கேட்பு மாதம் போலும்.. உ.பி.யில் ஆரம்பித்த இந்த ஒட்டுக் கேட்பு புகார்ஒவ்வொரு மாநிலமாகப் பரவி வருகிறது. எனது தொலைபேசியையும் ஒட்டுக் கேட்கிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதாசமீபத்தில் திடுக்கிடும் புகாரைத் தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து எனது போனையும்தான் ஒட்டுக் கேட்கிறார்கள் என ஆந்திர மாநில மாஜி முதல்வர் சந்திரபாபு நாயுடுகூறினார்.
இதையடுத்து அத்வானியின் போனையும் ஒட்டுக் கேட்டார்கள் என பாஜகவும் தன் பங்குக்கு ஒரு புகாரைத் தெரிவித்தது.இதெல்லாம் மத்திய அரசின் மீது கூறப்பட்டுள்ள புகார்கள்.
அந்த வகையில் இப்போது தமிழக அரசைக் குற்றம் சாட்டி போன் ஒட்டு கேட்பு புகாரைக் கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசு தனதுதொலைபேசியை ஒட்டுக் கேட்பதாக ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா அரசு எனது தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறது. இதை நான் எங்கே போய் சொல்வது?
ஒட்டுமொத்தமாக போலி வாக்காளர்களை சேர்க்க மனு கொடுத்தவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த நிலையிலும் கூட அதிமுகவினர் போலி வாக்காளர்களை சேர்க்க முயற்சித்து வருகின்றனர்.
ஹைதரபாத்தில் நடக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டிருக்கவேண்டும். இதன் மூலம் பல வெளிநாட்டு முதலீடுகளை அவர் கவர்ந்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாததன் மூலம்தமிழகத்திற்குப் பெரும் துரோகம் இழைத்து விட்டார் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications