சொர்க்கவாசல் திறப்பு: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்:
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை வணங்கி அருள் பெற்றனர்.வைகுண்ட ஏகாதசியின் பகல் பத்து விழாவின் நிறைவு நாளான இன்று அதிகாலை வைணவத் தலங்கள் தோறும் சொர்க்கவாசல்திறப்பு நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் வெகு விமரிசையாகசொர்க்க வாசல் திறப்பு நகழ்ச்சி நடைபெற்றது.
அதிகாலை 4.40 மணிக்கு நம்பெருமாள், ரத்தின அங்கி அணிந்து சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் இதைக் கண்டு களித்தனர்.
இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. சென்னைதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பெருமாளின்அருளைப் பெற்றனர்.












Click it and Unblock the Notifications