மனநோயாளி ஓட்டிய பஸ்சில் சிக்கிய பயணி பலி

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் மன நோயாளி ஒருவர் பேருந்தை தாறுமாறாக ஓட்டியதில், பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பயணி பரிதாபமாக இறந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

சென்னை தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு தனியார் பேருந்து இன்று காலை சென்றது. பேருந்து நிலையத்தில் பயணிகளைஇறக்கி விட்டு விட்டு ஓட்டுநரும், நடத்துனரும் டீ குடிக்கச் சென்று விட்டனர்.

அப்போது ஒரு மர்ம நபர் திடீரென பேருந்தில் ஏறி பேருந்தை ஓட்டத் தொடங்கினார். தாறுமாறாக அவர் பேருந்தை ஓட்டியதால்பேருந்துகளுக்காக காத்திருந்த பயணிகள் பீதியடைந்து ஓடத் தொடங்கினர்.

அப்போது செங்கல்பட்டைச் சேர்ந்த செங்கல்வராயன் என்பவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். மேலும் 3 பேரும்காயமடைந்தனர். சிறிது நேரம் பேருந்து நிலையத்தைக் கலக்கியெடுத்து அந்த நபர், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒருஎஸ்.டி.டி. பூத்தில் மோதி பேருந்தை நிறுத்தினார்.

உடனடியாக பயணிகளும், போலீஸாரும் பாய்ந்து சென்று அந்த நபரைப் பிடித்தனர். அவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்தவர் என்றும் மன நோயாளி என்றும் விசாரணையில் தெரிய வந்தது. அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தசம்பவத்தால் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+