தமிழகத்தில் பக்ரீத் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.உலகம் ழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தியாகத் திருநாள் என்று போற்றப்படும் பக்ரீத்பண்டிகையையொட்டி தமிழகத்திலும் சிறப்பான கொண்டாட்டம் காணப்படுகிறது.
சென்னை தீவுத் திடலில் இன்று காலை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது.திருவல்லிக்கேணி பெரிய மசூதி, ஆயிரம் விளக்கு மசூதி உள்ளிட்ட பல இடங்களில் பக்ரீத் தொழுகை நடந்தது.
இதேபோல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத்தையொட்டி குர்பானிஎனப்படும் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவை பலி கொடுக்கப்பட்டு அவற்றின் இறைச்சி ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications