புதுவையில் கண்ணனுடன் அதிமுக கூட்டணி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலை முன்னாள் அமைச்சர் கண்ணனின் புதுவைமுன்னேற்ற காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துஅதிமுக சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே, பாண்டிச்சேரியிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இரு மாநிலங்களிலும் ஒரே நாளில்வாக்குப்பதிவு நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.தமிழகத்தைப் போலவே புதுவையிலும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாகியுள்ளன. திமுக கூட்டணியில்பெரிய அளவில் மாற்றம் இருக்காது. அதே சமயம் அதிமுக கூட்டணியில் புதிய கட்சியாக புதுவைமுன்னேற்ற காங்கிரஸ் இடம்பெறவுள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் தொடங்கியுள்ள கட்சி தான் புதுவை முன்னேற்றகாங்கிரஸ். இந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக விருப்பம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. இது குறித்துக் கூறுகையில், புதுவை அரசுக்கு எதிரான அனைத்துஇயக்கங்களையும் ஒருங்கிணைக்க அதிமுக முயற்சி மேற்கொண்டுள்ளது. அரசுக்கு எதிரான அனைவரையும் ஒன்றிணைத்துசெயல்பட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் நடத்திய போராட்டங்களுக்கு புகா ஆதரவு தெரிவித்தது, நேரில் வந்து வாழ்த்தியது. அதேபோல அவர்கள் நடத்தியபோராட்டத்துக்கு நாங்கள் நேரில் சென்று வாழ்த்தினோம்.
போராட்டங்களில் மட்டுமல்லாது, காங்கிரஸ் அரசை அகற்றி புதிய அரசை அமைக்கவும் நாங்கள் இணைந்து செயல்படுவோம்என்றார்.
அவரது கருத்து குறித்து ப.கண்ணன் கூறுகையில், அன்பழகனின் கருத்து மகிழ்ச்சி தருகிறது. தேர்தல் நெருங்கும் போது முதல்வர்ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து முழு வடிவம் கொடுக்கப்படும். அதிமுகவுடன் இணைந்து தேர்தலைசந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications