சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் ஜெ. சிறப்பு யாகம்?
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா சார்பில் 12நாட்களுக்கு சிறப்பு யாகம் நடத்தப்படுவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2ம் தேதி சிறப்பு யாகம் ஒன்று தொடங்கியது. அன்று முதல்தினசரி அதிகாலை 4.40 மணிக்கு அதாவது பிரம்ம முகூர்த்தத்தில், தொடங்கி காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணிநேரம் இந்த யாகம் நடத்தப்பட்டு வருகிறது.ரூ. 30 லட்சம் செலவில் நடத்தப்பட்டு வரும் இந்த யாகம், உலக நன்மைக்காக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இந்த யாகத்தை கோவில் நிர்வாகம் நடத்தவில்லை. கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் விஜயக்குமார் ரெட்டிதனது சொந்த செலவில் யாகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
12 நாட்களுக்கு இந்த யாகம் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த யாகத்தை விஜயக்குமார் ரெட்டி நடத்துவதாக கூறப்பட்டாலும்கூட முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் சார்பில் தான் யாகம் நடத்தப்படுவதாக பேச்சு அடிபடுகிறது.
இதை உறுதிப்படுத்தவதைப் போல, யாகம் நடக்கும் நவராத்திரி மண்டபத்திற்குள் முக்கியப் பிரமுகர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுகிறார்கள். சபாநாயகர் காளிமுத்து, ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன், தமிழக அமைச்சர்கள் பலரும் இரவுநேரங்களில் யாகத்தில் கலந்து கொண்டு சென்றுள்ளனர்.
கோவில் முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாறுவேடத்திலும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.பக்தர்கள் அதிக நேரம் கோவிலில் நிற்க அனுமதிக்கப்படவில்லை.
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக சார்பில் இந்த யாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications