புக் எழுதுகிறார் குஷ்பு
![]() |
கற்பு குறித்துப் பேசப் போய் படாத பாடுபட்டு விட்ட குஷ்பு இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார்.
அவர் மீது தொடரப்பட்ட அத்தனை வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால்,கோர்ட்டுகளுக்கு அலையும் வேலை மிச்சமாகியுள்ளது.
கற்பு பேச்சால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு விட்ட குஷ்பு, இப்போது திரையுலக நிகழ்ச்சிகளுக்கு தனது இரண்டு மகள்களுடன்மீண்டும் போய் வருகிறார். போகும் இடங்களில் எல்லாம் குஷ்புவுடம் குசலம் விசாரித்தே அவருக்கு பழைய மேட்டரைஞாபகப்படுத்தி வருகிறார்களாம் கோலிவுட்காரர்கள்.
இருந்தாலும் யாரிடமும் எரிச்சல்பட முடியாத குஷ்பு, எல்லோரின் அட்வைஸையும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுகிறாராம். தனது தமிழ்த் திரையுலக வாழ்க்கையில் பட்ட அடிகள் மற்றும் பாராட்டுக்களை ஒரு புத்தகமாக வெளியிடவும்அவர் முடிவு செய்துள்ளாராம்.
அத்தோடு ஆண், பெண் நட்பு குறித்து நிலவும் கருத்துக்களையும் எழுத்து வடிவில் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளாராம்.(திருப்பியும் சிக்கலா?). ஆண்களுக்கு உள்ளதைப் போல சுதந்திரம் பெண்களுக்கு இல்லை என்று கருதும் குஷ்பு, அதை தனதுபுத்தகத்தில் விலாவாரியாக விளக்கவுள்ளாராம்.
இந்தப் புத்தகத்தில் குஷ்புவின் கருத்து மட்டும் இல்லாமல், அவரது தோழிகள், நண்பர்களின் கருத்துக்களையும் சேர்த்துப் போட்டுகலக்கவுள்ளாராம் (அதானே, போனா சேர்ந்து போவோம் என்கிற எண்ணம் போல...).
இந்தப் புத்தகத்தின் மூலம் சட்டரீதியாகவோ அல்லது உணர்வுரீதியாகவோ எந்தப் பிரச்சினையும் வராத வகையில் படுடெக்னிக்கலாக எழுதத் திட்டமிட்டுள்ளாராம் குஷ்பு.
ஒரு பிரச்சினை இப்போதுதான் ஓய்ந்துள்ளது. அடுத்த பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போடுகிறார் குஷ்பு.
சான்ஸ் இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகைகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்தா தானே ஓசி பப்ளிசிட்டி கிடைக்கும்.. ஆல் தபெஸ்ட் குஷ்பு.













Click it and Unblock the Notifications