சென்னைக்கு மோனோ ரயில்: ஜெ. உத்தரவு
சென்னை:
![]() |
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை,
நாட்டிலேயே அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதாவின்லட்சியமாகும். அவர் எடுத்த பல நடவடிக்கைகள் காரணமாக இன்று சென்னை கீழ்திசை நாடுகளில் புதிய அணிகலனாகமாறியுள்ளது.
முதலீடு செய்ய இந்தியாவில் தேர்வு செய்யப்படும் முக்கிய இடமாக செனஅனை விளறங்குகின்றன. இந்தியாவிலேயேசென்னையில் தான் சட்டம்-ஒழுங்கும் மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.
![]() |
புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னையின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்துக்குஅருகே ஒரு புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்தார். மருத்துவ வசதிகளின் தலைநகரமாகசென்னை விளங்குகிறது.
இந்த வளர்ச்சிகளால் சென்னையில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால் சென்னை பெருநகருக்கு என ஒருமாற்று போக்குவரத்துத் திட்டத்தை உருவாக்க பல திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன.
இதில் மோனோ ரயில் திட்டம் சிறப்பானதான இருக்கும் என்று கருதப்படுகிறது. குறைந்த செலவில், குறைந்த நிலத்தைகையகப்படுத்தி இத் திட்டத்தை அமல்படுத்த முடியும். ரப்பர் டயர்களில் இயங்கும் இந்த ரயில்களால் அதிக சத்தமும் இருக்காது.மேலும் பாதுகாப்பானதும் கூட. திட்டத்தை வேகமாகவே நிறைவேற்றிவிட முடியும்.
![]() |
இந்த ரயில் திட்டம் பாதுகாப்பானது, சிக்கனமானது. உயர்த்தப்பட்ட பாதையில் இயங்குவதால் தரைப் போக்குவரத்துக்குஇடைஞ்சல் இருக்காது. ரப்பர் டயர்கள், மின்சக்தியால் இயங்குவது ஆகிய காரணங்களால் ஒலி மாசுவோ, காற்று மாசுவோஏற்படாது.
டிசைன்-பில்ட்-ஓன்-ரன் (டிபிஓஆர்) என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் அமலாக்கப்படும். இதற்காக உலகஅளவில் டெண்டர் கோரப்படும்.
இந்த ரயில் சென்னையின் வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.















Click it and Unblock the Notifications