பாமக எம்எல்ஏ திடீர் ராஜினாமா: ஜெ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

Subscribe to Oneindia Tamil

அந்தியூர்:

பாட்டாளி மக்கள் கட்சியின் அந்தியூர் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.கிருஷ்ணன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர்முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.

சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ரிசர்வ் தொகுதி எம்எல்ஏவான கிருஷ்ணன் இன்று சபாநாயகர் காளிமுத்துவைநேரில் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.

அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட காளிமுத்து, தொடர் நடவடிக்கைக்காக அதை சட்டசபை செயலாளருக்கு அனுப்பிவைத்தார்.

இதையடுத்து போயஸ் கார்டன் சென்ற கிருஷ்ணன் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச்சேர்ந்தார். அவருடன் அவரது மகன்கள் ஏகாம்பர மூர்த்தி, மோகன் ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.

இது தொடர்பாக காளிமுத்து கூறுகையில், சொந்த விருப்பத்தின்பேரில் ராஜினாமா செய்கிறீர்களா அல்லது யாரேனும் வற்புறுத்திராஜினாமா செய்கிறீர்களா என்று கிருஷ்ணனிடம் கேட்டேன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ராஜினாமா செய்வதாகக்கூறினார். அவரது கடிதம் சபை விதிகளுக்கு உட்பட்டு இருப்பதால் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன் என்றார்.

இது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், இது அதிமுகவின் சதி வேலை தான். தேர்தலுக்குள் எப்படியாவதுபாமகவை தங்களுடன் இழுத்து விட வேண்டும் என்று அதிமுக தீவிரமாக யற்சித்தது. ஆனால் அது நடக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்துள்ள அக்கட்சி திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த தீவிரமாக முயலுகிறது. அதன் ஒருநடவடிக்கைதான் இந்த ராஜினாமா நாடகம். இப்படிச் செய்வதன் மூலம் திமுக கூட்டணியை பலமிழக்கச் செய்யலாம் என அதிமுகநினைக்கிறது. ஆனால் அது நடக்காது.

அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. மக்கள் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு சரியான பாடம்கற்பிப்பார்கள் என்றார்.

சமீபத்தில் இன்னொரு தலித் எம்.எல்.ஏவான முருகவேல் ராஜன் (வந்தவாசி தொகுதி) பாமகவில் இருந்து விலகினார். தனிக் கட்சிஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந் நிலையில் இன்னொரு தலித் எம்எல்ஏவும் அக் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+