போகி தமிழர் திருநாளே அல்ல: காளிமுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போகிப் பண்டிகை தமிழர் திருநாளே அல்ல என சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
தமிழர் திருநாளைக் கூட மதிக்காமல் போகியன்று சட்டமன்றத்தைக் கூட்டியதைக் கண்டித்து முதல் நாள் கூட்டத்தையும் ஆளுநர்உரையையும் புறக்கணிக்கப் போவதாக எதிர்க் கட்சிகள் அறிவித்துள்ளன.இது குறித்து காளிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:
போகி என்பது தமிழர் திருநாள் அல்ல. போகி தமிழ்ப் பெயரும் அல்ல. போகி என்பது இந்திரனின் பெயர். தை தான் தமிழர்திருநாள். போகி அலுவலக நாள் தான்.
இதனாால் போகிப் பண்டிகையை காரணமாக வைத்து கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக திமுக பொதுச் செயலாளர்பேராசிரியர் அன்பழகன் கூறியிருக்கிறார். தமிழார்ந்த பேராசிரியர் எதை வைத்து இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகள் வேறு காரணங்களைக் கூறி அவையின் முதல் நாள் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாகஅறிவித்துள்ளன.
சட்டசபை புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்று எல்லோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications