திமுகவினர் பொட்டு வைக்க ஸ்டாலின் தடை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் திமுக இளைஞர் அணியின் சார்பில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பலஇளைஞர்கள் நெற்றியில் குங்குமம், விபூதி பட்டையுடன் வந்திருந்தனர்.
இங்கு கூடியுள்ள சிலர் நெற்றியில் பட்டை, பொட்டு, குங்குமம் வைத்துள்ளீர்கள். இது திராவிட பாரம்பரியத்துக்கு உகந்ததல்ல.எனவே நெற்றியில் பட்டை, குங்குமம், பொட்டு வைத்துக் கொண்டு கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்வதை திமுகவினர்கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றார்.
இதையடுத்து பலரும் அதை அழித்தனர்.
முன்னதாக திருமயத்தில் நடந்த திமுகவினர் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,
வரும் தேர்தலில் திமுக கூட்டணி வென்று 5வது முறையாக கருணாநிதி மீண்டும் முதல்வராவது உறுதி. இதை யாராலும் தடுக்கமுடியாது. திமுக கொண்டு வந்த பல திட்டங்கள் இப்போது காணாமல் போய்விட்டன.
சிறுசேரியில் அரசு நிலத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த தனியாருக்கு தாரை வார்த்துள்ளார் ஜெயலலிதா. இதில் அரசுக்கு ஏகப்பட்டகோடிகள் நஷ்டம். டான்சி வழக்கில் ஜெயலலிதா தப்பியிருக்கலாம், ஆனால், சிறுசேரி நில விவகாரத்தில் அவர் தப்பவே முடியாதுஎன்றார் ஸ்டாலின்.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |