சென்னையை மூடிய போகி புகை!
சென்னை :
சென்னை நகரில் போகிப் பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீ வைத்துக் கொளுத்தியதால் நகர் முழுவதும் பெரும்புகை மூட்டமாகக் காணப்பட்டது.
பொங்கலுக்கு முந்தைய விழாவான போகிப் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் போகிப் பண்டிகைவழக்கமான உற்சாகத்துடன் இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது.அதிகாலை 4 மணி முதலே போகி கொளுத்த ஆரம்பித்து விட்டனர். வீட்டில் உள்ள பழைய பொருட்கள், அட்டைப் பெட்டிகள்,பாய்கள், தலையணைகள் உள்ளிட்ட பல பொருட்களை வீட்டுக்கு முன்பு குவித்து அதைத் தீவைத்துக் கொளுத்தி போகியைக்கொண்டாடினர்.
சிறுவர்கள் கையில் சிறிய மேளத்துடன் தாளமிட்டபடி போகியை சுற்றி வந்து மகிழ்ச்சி அடைந்தனர். போகிப் புகை கிளம்பியதால்சென்னை நகர் முழுவதும் புகை மண்டலமாக மாறி விட்டது. ஏற்கனவே காலை நேரத்தில் கடுமையான பனி கொட்டிக்கொண்டிருப்பதால், மூடுபனியுடன், போகி புகையும் சேர்ந்து சென்னை நகரமே வெண்புகை மண்டலமாக காணப்பட்டது.
டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது என்று போலீஸார் எச்சரித்திருப்பதால் பெரும்பாலான மக்கள் அவற்றைதவிர்த்தனர். ஆனாலும் சிலர் சந்தில் சிந்து பாடிவிட்டனர். இதனால் சில இடங்களில் டயர்கள் துர் நாற்றத்துடன் எரிந்துஎரிச்சலை ஏற்படுத்தின.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications