சென்னை பஸ்சில் 1,000 டெடோனேட்டர்கள்!
சென்னை :
தர்மபுரியிலிருந்து, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்த அரசுப் பேருந்தில் ஏராளமான வெடிபொருட்கள் அடங்கியபை கண்டுபிடிக்கப்பட்டது.
தர்மபுரியிலிருந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அரசு விரைவுப் பேருந்து சென்னைக்குக் கிளம்பியது. இரவு 7மணிக்கு சென்னை கோயம்பேடு வந்து சேர்ந்தது.பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் ஓட்டுனர் ஜெகந்நாதன் பேருந்தை ஒருமுறை பரிசோதனை செய்துள்ளார்.அப்போது ஒரு இருக்கையின் கீழே பெரிய பை இருந்ததைப் பார்த்த அவர் அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது, அதில், 2பெட்டிகளில் ஏராளமான டெட்டனேட்டர்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அந்தப் பையை போலீஸாரிடம் ஒப்படைத்தார். போலீஸார் பையை முழுமையாக சோதித்துப் பார்த்தனர். மொத்தம்1,000 டெட்டனேட்டர்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
இந்த டெட்டனேட்டர்கள் கல் குவாரியில் பயன்படுத்த எடுத்து வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கோயம்பேடு பஸ்நிலையத்தில் பலத்த போலீஸ் கண்காணிப்பு இருப்பதால் இதைக் கொண்டு வந்தவர் பயத்தில் வெடிபொருள் இருந்த பையைஅப்படியே விட்டுச் சென்றிருக்கலாம் என போலீஸார் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பையைக் கொண்டு வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. பெருமளவில் டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி, பெங்களூர் மற்றும்ஆந்திராவிலிருந்து வரும் பேருந்துகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications