7 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை:
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நில நிர்வாகத்துறை ஆணையராக பணியாற்றி வந்த எஸ்.ஆதிசேஷையா, வருவாய்த் துறைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலராக இருந்து வந்த சந்திர மவுலி, சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். இவர் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடுசெய்வதில் அரசுக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நில ஒதுக்கீடு செய்வதில் அரசிடம் சில சட்டச் சிக்கல்களை சுட்டிக் காட்டிய இவர் விடுமுறையில் போய்விட்டார். இந் நிலையில்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வந்த ராஜீவ் நயன் செளபே, அதன் சிறப்பு அதிகாரி மற்றும்நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
தொழில்துறை அரசு செயலாளராக உள்ள ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலராகவும், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ்கார்ப்பரேசன் தலைவராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
தர்மபுரி முன்னாள் கலெக்டர் சுதீப் ஜெயின், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில தேர்தல் ஆணையச் செயலாளராகப் பணியாற்றி வந்த காசி விஸ்வநாதன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சேலம் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவை தொழிற் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிவந்த அசோக் வர்தன் ஷெட்டி ஊனமுற்றோர் நல்வாழ்வுத்துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications