இலங்கையிலிருந்து மேலும் 25 அகதிகள் வருகை
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திற்கு வரும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
வட கிழக்கு இலங்கையில் போர் அபாயம் அதிகரித்து வருவதால், தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர்.சனிக்கிழமை 5 பேர் யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம் வந்தனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 37 பேர் அகதிகளாகவந்துள்ளனர்.இந்த நிலையில் இன்று அதிகாலையில் தனுஷ்கோடி அருகே உள்ள தம்பிக்காடு என்ற இடத்திற்கு 20 பேர் அகதிகளாக வந்தனர்.அவர்களை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர்அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அகதிகள் வருகை தினசரி நடவடிக்கையாக மாறி வருவதையடுத்து உயர் காவல் அதிகாரிகள் தனுஷ்கோடியில் சனிக்கிழமைதீவிர ஆய்வு நடத்தினர். அங்கு தற்காலிகமாக ஒரு போலீஸ் சோதனை முகாமை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மண்டபம் அகதிகள் முகாமில் தற்போது 2,269 வீடுகள் உள்ளன. அங்கு 702 அகதிகள் தங்கியுள்ளனர். இங்குள்ளபெரும்பாலான வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே பல வீடுகளில் அகதிகள் யாரும் தங்கவைக்கப்படவில்லை. தற்போது மீண்டும் அகதிகள் வருகை ஆரம்பித்திருப்பதால் அதிகாரிகளுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications