வம்பிழுக்க வேண்டாம்: விஜயகாந்த்துக்கு திமுக எச்சரிக்கை
சென்னை:
முரசொலி அலுவலகம் குறித்து தேவையில்லாமல் பேசி, திமுகவை வம்புக்கு இழுக்கப் பார்க்கிறார் நடிகர் விஜயகாந்த், அதைஅவர் கைவிட்டால் நல்லது என்று தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது கல்யாண மண்டபத்தை இடிக்க திமுக சதிசெய்வதாகவும், அதை சந்திக்கத் தான் தயார் என்றும், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் குறித்தும்கருத்து தெரிவித்திருந்தார்.இதற்கு, தென் சென்னை திமுக செயலாளர் ஜே. அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் இடிபடாத வகையில் கோடம்பாக்கம் மேம்பாலம்கட்டப்பட்டதாக பொய்யான செய்தியை கூறியுள்ளார் விஜயகாந்த்.
கோடம்பாக்கம் பாலம் சிறியதாக கட்டப்பட்டதில் வரலாறு இருப்பதாகவும் அவர் தவறான செய்தியை அளித்துள்ளார்.கோடம்பாக்கம் ஆர்க்காடு சாலையில் உள்ள பாலம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அந்த சமயத்தில் அங்குமுரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருக்கவில்லை. இது தான் உண்மை.
எனவே, புதிய அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ள விஜயகாந்த், தனது திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் பாலம்வருவதால், ஆத்திரத்தில் ஆலோசிக்காமல், திமுகவையும், முரசொலி அலுவலகத்தையும் தேவையில்லாமல் வம்புக்குஇழுக்கிறார், விமர்சிக்கிறார்.
கோயம்பேடு சாலை சந்திப்பில் தினசரி பல லட்சம் பேர் பயணிக்கிறார்கள். அந்த நெரிசலைத் தவிர்ப்பதற்காகவே மேம்பாலம்கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விஜயகாந்த் கல்யாண மண்டபம் உள்ளிட்ட 41 கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டியசூழ்நிலை எழுந்துள்ளது.
ஏற்கனவே, கிண்டியில் உள்ள சிப்காட் நிறுவன கட்டடம் பாலம் கட்டும் பணிக்காக இடிக்கப்பட்டு வருவதை விஜயகாந்த்நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே இனியும் இதுபோல வரலாறு தெரியாமல் எதையாவது பேசி, திமுகவை வம்புக்கிழுக்க வேண்டாம் என விஜயகாந்த்தைஎச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அன்பழகன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications