அரக்கோணம்: ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் சாவு
அரக்கோணம்:
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் பேருந்து டயர் வெடித்து, ஆற்றுப் படுகையில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர். 48 பயணிகள் காயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் என்ற இடத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் அரக்கோணம் வந்துகொண்டிருந்தது. தக்கோலம் கல்லாறு என்றஇடத்தில் பேருந்து வந்தபோது, முன் சக்கரம் திடீரென வெடித்தது. இதனால்பேருந்து நிலைகுலைந்து தாறுமாறாக ஓடியது.
கல்லாறு பாலத்தின் தடுப்புச் சுவரை இடித்துத் தள்ளி, வறண்டு போய்க் கிடந்த பாலத்தில் பேருந்து உருண்டு விழுந்தது. 40 அடிஉயரத்திலிருந்து பேருந்து ஆற்றுப் படுகையில் விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் முன் பகுதியில் உட்கார்ந்து பயணம் செய்த 8பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்த அறிந்ததும் அக்கம் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தீயணைப்புப் படையினர், போலீஸார் விரைந்துசென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அரக்கோணம் அருகே உள்ள ராஜாளி கடற்படை தளத்தைச் சேர்ந்த வீரர்களும் மீட்புநடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விபத்தில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் 15 பேர் பலத்த காயமடைந்ததால், சென்னை அரசு பொது மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்கள் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications