சிங்கப்பூர் சிறையில் தமிழக இளைஞர் மரணம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதுரை மாவட்ட இளைஞர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது உடலைவரவழைக்கக் கூடிய வழி தெரியாமல் அவரது ஏழைக் குடும்பம் பரிதவித்துக் கொண்டிருக்கிறது.

மதுரை மாவட்டம் கொட்டம்பாட்டி அருகே உள்ள பாறை அம்மாப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். திருமணமானஇவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 35 வயதான பரமசிவம், சிங்கப்பூரில் வேலைக்குச் சென்றார்.

வேலைக்கு சென்ற நிலையில் தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவை பரமசிவம் தொலைத்து விட்டதாக தெரிகிறது. இதனால்ஜனவரி 1ம் தேதி அவரை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 6ம் தேதி பரமசிவம் மர்மமான முறையில் இறந்து போனார். அவர் எப்படிஇறந்தார் என்பதை சிங்கப்பூர் சிறை நிர்வாகம் தெளிவாகத் தெரிவிக்கவில்லை.

அவர் சிறையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பரமசிவம் இறந்த செய்தி, அவரது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஏழைக் குடும்பமானஅவர்களால் பரமசிவத்தின் உடலை எப்படி ஊருக்குக் கொண்டு வருவது என்பது தெரியாமல் நிலை குலைந்து போயுள்ளனர்.

தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்று கண்ணீரும், கம்பலையுமாக பரமசிவத்தின் குடும்பத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+