சீக்கிய மாணவனை கண்டிக்கவில்லை?: மலேசிய கல்வித்துறை மறுப்பு
கோலாலம்பூர்:
மலேசியாவில் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் சீக்கிய மாணவனை தாடி மற்றும் மீசையை நீக்கி விட்டு வரும்படி பள்ளிநிர்வாகம் நிர்பந்தம் ஏதும் செய்யவில்லை என்று மலேசிய கல்வித்துறை துணை இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர் ரன்வீர் சிங் என்ற மாணவனை முகச்சவரம்செய்து விட்டு பள்ளிக்கு வரும்படி அவர் படிக்கும் பள்ளியின் நிர்வாகம் உத்தரவிட்டது.இது குறித்து ரன்வீர் சிங் தந்தை ஜஸ்மெல் சிங் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதுபற்றி அவர் கூறுகையில் சீக்கியமதத்தின் முறைப்படி ஒவ்வொரு சீக்கியனும் தனது உடம்பின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் முடியை அகற்ற கூடாது என்றநடைமுறை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலேசிய பள்ளி எனது மகனுக்கு எதிராக உத்தரவுபிறப்பித்துள்ளது.
முகச்சவரம் செய்து விட்டு வராவிட்டால் வேறு பள்ளியை பார்த்து கொள்ளும்படியும் கூறிவிட்டது என்று எதிர்ப்புதெரிவித்திருந்தார். மலேசியாவில் உள்ள பல்வேறு சீக்கிய அமைப்புகளும் பள்ளி நிர்வாகத்தின் நடைமுறைக்கு எதிராக கண்டனகுரல் எழுப்பி வந்தன.
இந்நிலையில் சீக்கிய மாணவனை தாடி மற்றும் மீசையை நீக்கிவிட்ட வரும்படி பள்ளி நிர்வாகம் கட்டாயம் ஏதும் செய்யவில்லைஎன்று மலேசிய கல்வித்துறை தெரிவித்துள்ளது. மலேசிய கல்வித்துறையின் துணை இயக்குனர் ஜெனரல் தாதுக் குசைனிஹஸ்புல்லா இதுபற்றி கூறுகையில் ரன்வீர் சிங் அந்த பள்ளியில் இருந்து இட மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications