மேலும் 2 பாமக எம்எல்ஏக்கள் ராஜினாமா: அதிமுகவில் ஐக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து மேலும் இரு தலித் எம்எல்ஏக்கள் விலகி முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்சேர்ந்தனர். இந்த இருவருமே சமீப காலமாக பாமகவில் இருந்து தூர விலகியே இருந்தனர் என்பதும் தனித்தே செயல்பட்டுவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாமகவைச் சேர்ந்த அந்தியூர் (தனி) தொகுதியைச் சேர்ந்த தலித் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.கிருஷ்ணன் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.பின்னர் அவர் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் இன்று மேலும் 2 பாமக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

தாராபுரம் (தனி) தொகுதியைச் சேர்ந்த சிவகாமி வின்சென்ட், வந்தவாசி (தனி) தொகுதி எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் ஆகியோர்இன்று சபாநாயகர் காளிமுத்துவை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.

அவர்களது ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக காளிமுத்து தெரிவித்தார். பின்னர் இரு எம்.எல்.ஏக்களும் முதல்வர்ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்று சந்தித்தனர்.

அவரிடம் தாங்கள் இருவரும் அதிமுகவில் இணைவதாக தெரிவித்தனர். அதை ஏற்ற ஜெயலலிதா, இருவரிடமும் அதிமுகஉறுப்பினர் அட்டையைக் கொடுத்தார்.

இதில் சிவகாமி வின்சென்ட் தான் பாமகவில் இருந்து அதிமுகவுக்கு ஆதரவாக மாறிய முதல் எம்எல்ஏ ஆவார். முதலில் இவர் தான்பாமக தலைமையுடன் மோதி அக் கட்சியில் இருந்து விலகியே இருந்தார். தொடர்ந்து அதிமுக ஆதரவாளராக இருந்தார்.

முருகவேல் ராஜனும் பாமக தலைமையுடன் அதிருப்தியில் இருந்தார். இவர் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாகக் கூறி வந்தார்.

இருவருமே கட்சிக் கூட்டங்களைப் புறக்கணித்து தனித்து செயல்பட்டு வந்தனர். இருவருமே நெடு நாட்களாகவே அதிமுகவில்இணையப் போகிறார்கள் என்று கருதப்பட்டு வந்தனர். ஆனால், இவர்களை முந்திக் கொண்டு அந்தியூர் எம்எல்ஏ கிருஷ்ணன்பாமகவில் இருந்து விலகி அதிமுகவுக்குப் போய்விட்டார். இந்த கட்சித் தாவலில் தமிழக உளவுப் பிரிவின் முழு கை வரிசைஇருப்பதாக பாமக கூறுகிறது.

இந் நிலையில் இன்று சிவகாமியும் முருகவேலும் கட்சி தாவியுள்ளனர்.

ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பின் நிருபர்களைச் சந்தித்த சிவகாமி வின்சென்ட் கூறுகையில், தலித்துகளின்பாதுகாவலர் அம்மா மட்டுமே. இதனை உணர்ந்தே நாங்கள் அதிமுகவில் இணைந்தோம். பாமகவில் வன்னியர்களுக்குமட்டுமே மரியாதை கிடைக்கிறது. எங்களை புறக்கணித்து வந்தனர். சட்டசபை நடவடிக்கைகளில் நாங்கள் கொலு பொம்மைகள்போலவே இருந்தோம்.

எங்களைப் பேச விடுவதில்லை. விவாதங்களில் பங்கேற்க அனுமதிப்பதில்லை. தலித்துகளை பாமகவில்அவமானப்படுத்துகிறார்கள். இதனால் தான் நாங்கள் பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளோம் என்றார்.

முருகவேல்ராஜன் கூறுகையில், பாமக ஒரு வன்னியர் கட்சியாகவே இன்னும் திகழ்கிறது. தலித்துகளுக்கு அங்கு மரியாதையும்கிடையாது, கெளரவமும் கிடையாது. கடந்த நான்கு ஆண்டு காலமாக நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்,இழிவுபடுத்தப்பட்டோம். சபை விவாதங்களில் எங்களுக்கு பேச அனுமதி கொடுப்பதில்லை.

கொத்தடிமைகள் போல இருந்தோம். டாக்டர் ராமதாஸும், அவரது புதல்வர் அன்புமணியும் வைத்தது தான் சட்டமாக உள்ளது.இந்த ஜாதீயக் கண்ணோட்டம் எங்களுக்குப் பிடிக்காத காரணத்தினால் தான் அக்கட்சியிலிருந்து விலகினோம்.

தலித்துகளுக்கு அதிமுக ஆட்சி எத்தனையோ செய்துள்ளது. இலவச சைக்கிள்கள், படிப்புதவி உள்ளிட்ட பல திட்டங்களைமுதல்வர் ஜெயலலிதா தலைமயிலான அதிமுக அரசு செய்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே நான் அதிமுகவில்இணைந்தேன் என்றார் முருகவேல்ராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+