சொர்ணமால்யாவின் நாட்டிய விழாவில் ரகளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Swarnamalya

திருவையாறு தமிழிசை விழாவில் நடிகை சொர்ணமால்யாவின் நடன நிகழ்ச்சிக்காக வேறொரு நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தசொன்னதால் தகராறு ஏற்பட்டது.

திருவையாறு அரசர் கல்லூரி திடலில் தமிழிசை விழா நடந்து வருகிறது. 2ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று கனகா என்பவரின்நாட்டியம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ரசிகர்கள் குவிந்தனர். கனகாவும் சரியான நேரத்திற்கு வந்து விட்டார். ஆனால் அப்படி இப்படியாக நாட்டிய நிகழ்ச்சிதொடங்க இரவு 12 மணி ஆகிவிட்டது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது அதற்குள் நடிகைசொர்ணமால்யாவின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்க உள்ளது என்றும் இத்துடன் நீங்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொள்ளுங்கள்என்றும் நிர்வாகிகள் கனகாவிடம் கூறினர்.

திடுதிடுப்பென்று சொன்னால் முடிக்க முடியாது. மங்கள இசையுடன் முடிப்பது தான் சம்பிரதாயம் என்று சொல்லி கனகா ஆடிக்கொண்டிருந்தார். இதனால் நிர்வாகிகள் கோபம் அடைந்தனர். இதனால் மைக்கை ஆப் செய்தனர். ஆனால் பேசும் படம் போலகனகா ஆடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து ரசிகர்கள் சிரித்தனர்.

இதனால் கனகா குழுவில் உள்ளவரை ஒரு நிர்வாகி போடா என்று திட்ட சண்டை விஸ்வரூபம் எடுத்தது. பிறகு மன்றபொதுச்செயலாளர் சரவணன் அவர்களை சமாதானம் செய்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதன் பிறகு இரவு ஒரு மணிக்கு மேல் சொர்ணமால்யாவின் நாட்டியம் அரங்கேறியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+