தியாகராஜ ஆராதனை விழா இன்று தொடக்கம்
திருவையாறு:
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் ஆராதனை விழா இன்று மாலை திருவையாறில் தொடங்குகிறது.
சங்கீத மூர்த்தியான தியாகராஜர் திருவாரூரில் பிறந்தார். திருவையாறில் வாழ்ந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவரது சமாதியில்அவருடைய கீர்தனைகளை பாடும் ஆராதனை விழா 6 நாட்கள் நடைபெறும்.இந்த ஆண்டு 159வது ஆராதனை விழா இன்று மாலை தொடங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவுக்கு தியாகபிரம்ம மகோத்ஸவ சபா தலைவர் ஜி.ஆர். முப்பனார் தலைமை தாங்குகிறார். குன்னக்குடி வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார்.
சபா அறங்காவலரும் தமிழக காங்கிரஸ் தலைவருமான ஜி.கே. வாசன், மாவட்ட கலெக்டர் வீரசண்முகமணி ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
விழாவில் மதுரை டி.என்.சேஷகோபாலன் பாடுகிறார். அவரை தொடர்ந்து ரவிகிரன் சித்ரவீணை வாசிக்கிறார். இதை தொடர்ந்து21ம் தேதி வரை நடக்கவுள்ள விழாவில் பிரபல சங்கீத வித்வான்கள் சீர்காழி சிவ சிதம்பரம், பாடகர் ஜேசுதாஸ், உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன் உள்பட பல சங்கீத வித்வான்கள் கலந்து கொண்டு இசை விருந்து படைக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
