வீரப்பன் சமாதியில் பொங்கல் வைத்த முத்துலட்சுமி

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

வீரப்பன் நினைவிடத்தில் பொங்கல் வைத்து வழிபட்டார் அவரது மனைவி முத்துலட்சுமி.

மேட்டூர் அருகே மூலக்காட்டில் உள்ள வீரப்பன் சமாதியில் முத்துலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் பொங்கல் வைத்துவழிபட்டனர். வழிபாடு நடத்திய பின் முத்துலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:

கர்நாடக வனத்துறை பாலாறு மற்றும் கோபிநத்தம் பகுதியில் செக் போஸ்ட் அமைத்து சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூல்செய்கிறது. இதனால் பயணிகள் மட்டுமின்றி அங்கு வசிக்கும் தமிழர்களும் பாதிக்ப்படுகின்றனர்.

அங்கு வசிக்கும் மக்கள் அவசர ஆபத்தென்றால் மேட்டூருக்கு தான் வரவேண்டும். ஆனால் செக் போஸ்ட் ஊழியர்கள் இரவுநேரத்தில் வரும் பொது மக்களை அனுமதிக்க மறுத்து விடுகின்றனர். எனவே கர்நாடக வனத்துறையினர் கட்டுப்பாடுகளைதளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது கணவர் வீரப்பனை கொன்ற தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் நாடாளுமன்றத்தில் பாராட்டுதெரிவிக்கப்பட்டது. ஆனால் எனது கணவர் எப்படி இறந்தார் என்ற மர்மத்தை இன்னும் சில மாதங்களில் வெளியிடுவேன்.அப்போது அவர்களின் உண்மை முகம் தெரியவரும்.

அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சதாசிவன் கமிஷன் கூறியுள்ளது. ஆனால்பாதிப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறவில்லை. போலீார் மீதும் நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும்.

ரூ.50,000 மதிப்புள்ள எனது ஸ்கூட்டி மற்றும் எனது 3 பவுன் தங்க நகைகளை தர்மபுரி எஸ்பியாக இருந்த அசோக்குமார்பறிமுதல் செய்தார். தற்போது என்னுடைய ஸ்கூட்டியை மேட்டூர் அதிரடிப்படை போலீசார் ஓட்டிக் கொண்டுள்ளனர்.

நான் பலமுறை எஸ்பியிடம் தொலைபேசி மூலம் என்னிடம் பறிமுதல் செய்த பொருட்களை திருப்பி தருமாறு கேட்டும் அவர்காலம் கடத்தி வருகிறார். எனவே எஸ்பி அசோக்குமார், அதிரடிப்படை எஸ்பி சண்முகவேல் ஆகியோருக்கு விரைவில் நோட்டீஸ்அனுப்ப முடிவு செய்துள்ளேன் என்றார் முத்துலட்சுமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+