சதி: தொண்டர்களுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் தான் கலந்து கொள்ளவுள்ள சுற்றுப்பயணப் பொதுக்கூட்டங்களில் குழப்பம் ஏற்படுத்தி, ரகளை செய்ய சிலர்சதி செய்து வருவதால் தொண்டர்கள் கட்டுக்கோப்புடனும், கவனமாகவும் இருந்து இந்த சதியை முறியடிக்க வேண்டும் என்றுநடிகர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார்.

தேசிய முற்பாக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜயகாந்த், கட்சி ஆரம்பித்த பின்னர் தமிழகத்தின் சிலபகுதிகளுக்கு போய் பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதையும் கவர் செய்யும் வகையில்சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனவரி 19ம் தேதி முதல் இந்த சுற்றுப்பயணம் தொடங்குகிறது. இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வருகிற 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 20ம் தேதி வரை தமிழகம் முழுவதும் இடைவிடாமல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன்.

தமிழக மக்கள் அனைவரையும் சந்திக்கும் ஆவல் இருந்தாலும், தேர்தலுக்கு கால அவகாசம் குறைவாக இருப்பதால், அனைத்துப்பகுதிகளுக்கும் என்னால் வர இயலாத நிலை உள்ளது. எனவே சுற்றுப்பயணத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில்மட்டுமே நான் பேச முடியும் என்பதை தொண்டர்களும், கட்சி அமைப்பாளர்களும் உணர வேண்டும்.

சுற்றுப்பயணத்தில் மக்களை சந்திக்கிற நிகழ்ச்சிகளைத் தவிர வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டாம். நமதுகூட்டங்களில் கூடுகிற தொண்டர் கடலைப் பார்த்து பொறாமை எண்ணம் கொண்ட சிலர் சதி செய்து, குழப்பம் ஏற்படுத்தமுயலுவார்கள். அந்த சதித் திட்டத்தை நாம் பொறுமையாகவும், கவனமாகவும் இருந்து முறியடிக்க வேண்டும்.

நாம் மிகவும் கட்டுப்பாடானவர்கள் என்பதை மதுரை மாநாட்டிலே நிரூபித்துள்ளோம். அந்த கட்டுப்பாடு தொடர்ந்து எனதுபொதுக்கூட்டங்களிலும் எதிரொலிக்க வேண்டும். மாவட்ட கழக நிர்வாகிகளின் அறிவுரைப்படி செயல்பட்டுநமதுபொதுக்கூட்டங்களை வெற்றிகரமாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

19ம் தேதி முதல் சூறாவளி சுற்றுப்பயணம்:

விஜயகாந்த் சுற்றுப்பயணம் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 19ம்தேதி முதல் தொடர்ந்து 3 மாதங்களுக்கு தமிழகம் முழுவதும் விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

19ம் தேதி தேனி, 20,21 ஆகிய நாட்களில் திண்டுக்கல், 23, 24 ஆகிய நாட்களில் சிவகங்கை, 26, 27 தேதிகளில் ராமநாதபுரம்,29, 30ல் திருச்சி, பிப்ரவரி 1, 2ல் பெரம்பலூர், 4, 5ல் கரூர், 7, 8, 10, 11 ஆகிய நாட்களில் கோவை, 13, 14, 15 தேதிகளில் ஈரோடு,17, 18 நாமக்கல், 20, 21,22 ஆகிய நாட்கள் சேலம், 24, 25 தர்மபுரி, 27, 28 கிருஷ்ணகிரி, மார்ச் 2,3,4 ஆகிய நாட்களில் வேலூர்,6,7ல் திருவண்ணாமலை, 9, 10, 11 ஆகிய நாட்களில் விழுப்புரத்திலும், 13,14 கடலூர், 16, 17ல் காஞ்சிபுரம், 19, 20ல்திருவள்ளூரிலும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.

முன்னதாக வருகிற 17ம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்தில் காலை 10 மணிக்கு சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து விஜயகாந்த் அஞ்சலி செலுத்துவார்.

மாநிலம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்என்று கூறியுள்ளார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+