சென்னை மாநகராட்சியில் கொடியேற்றுவது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி துணை மேயர் இல்லாத நிலையில் ரிப்பன் கட்டடத்தில் குடியரசு தினத்தன்று அமைச்சர் ஒருவர் மூலம்தேசியக் கொடியை ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி துணை மேயர் தியாகராஜன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதியிலிருந்து தலைமறைவாகஉள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில், நிவாரணம் பெறச் சென்று 42 பேர் பலியான சம்பவத்திற்கு சிறப்புமன்றக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று வலியுறுத்தி கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார். கமிஷனரிடம் மொபைல் போனிலும்பேசினார். இருப்பினும் மன்றக் கூட்டம் கூட்டப்படவில்லை.

துணை மேயர் எப்போது சென்னைக்கு வருவார் என்பது மர்மமாக உள்ளது. இந்த நிலையில், வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசுதினம் வருகிறது. குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று மேயர் அல்லது மேயர் பொறுப்பில் இருக்கும் துணை மேயர் கொடிஏற்றுவது வழக்கம்.

ஆனால் வரும் குடியரசு தினத்தன்று துணை மேயர் இல்லாத நிலையில் தேசியக் கொடியை ஏற்றுவது யார் என்ற கேள்விஎழுந்துள்ளது. துணை மேயருக்கு அடுத்து ஆளுங்கட்சித் தலைவர் சுகுமார்பாபு தேசியக் கொடியை ஏற்றுவார் என்ற கருத்துநிலவியது.

இருப்பினும் மேயர், துணை மேயர் இல்லாத நிலையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் உள்ளாட்சித் துறைஅமைச்சரையோ அல்லது மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சரையோ அழைத்து, குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்றலாம்என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+