நிதியை தடுக்கும் திமுக கூட்டணி: ஜெ. தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக மழை, வெள்ள நிவாரண நிதி தொடர்பாக திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பாசாங்கு செய்து நாடகமாடுவதாகமுதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபை கடந்த 13ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்று மறைந்த உறுப்பினர்கள், முன்னாள் குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணனுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று காலை 10 மணிக்கு சபை கூடியது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரை தொடங்கியது.முதலில் பேசிய திமுக உறுப்பினர் ஆற்காடு வீராசாமி, தமிழக மழை, வெள்ள நிவாரண நிதி தொடர்பாக மத்திய அரசு கேட்டபுள்ளி விவரங்களை தமிழக அரசு அனுப்பி வைக்கவில்லை என்றார்.

அப்போது குறுக்கிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தமிழக மழை, வெள்ள நிவாரண நிதி தொடர்பாக மத்திய அரசுகேட்ட அத்தனை புள்ளி விவரங்கைளையும் எப்போதோ அனுப்பி வைத்து விட்டோம்.

என்னென்ன இனங்களில் எவ்வளவு நிதி தேவை என்பதை மிகவும் விரிவாகவே அனுப்பி வைத்துள்ளோம். இத்தனை செய்தும்தமிழக அரசு கோரிய ரூ. 13,000 கோடி நிதியில் இதுவரை வெறும் 1000 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

முழு நிதியைக் கொடுக்க வேண்டாம், பாதியைக் கூடத் தர முடியாதா மத்திய அரசால்? இங்கே திமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள் கூடி ஒரு கூட்டம் போட்டன. அதில், தமிழக அரசு கோரிய நிதியைக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசைவலியுறுத்தி தீர்மானம் போட்டனர்.

பின்னர் அந்தத் தீர்மானத்தை இவர்கள் அங்கும் வகிக்கும் மத்திய அரசிடம் கொண்டு போய்க் கொடுத்தனர். இங்கே கேட்டதைகொடுங்கள் என்று தீர்மானம் போட்டு விட்டு, டெல்லிக்கு சென்று, ஜெயலலிதா கேட்பதை கொடுக்காதீர்கள்.

தேர்தல் வரப் போகிறது. கேட்ட நிதியைக் கொடுத்தால், அதை பயன்படுத்தி ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும்.எனவே ஜெயலலிதா கேட்ட நிதியக்ை கொடுக்காதீர்கள் என்று கூறி விட்டனர்.

இதனால் தான் தமிழக அரசு கேட்ட தொகையைக் கொடுக்காமல் மத்திய அரசு அமைதி காத்து வருகிறது. இதை திமுககூட்டணியினர் மறுத்தால், அவர்கள் கொடுத்த தீர்மானத்தை மத்திய அரசு என்ன செய்தது? அவர்களது தீர்மானத்தை அவர்கள்அங்கும் வகிக்கும் அரசே மதிக்கவில்லையா? அல்லது இவர்கள் தீர்மானத்தைக் கொடுத்தால் குப்பையில் தூக்கிப் போட்டுவிடுமா என்பதை திமுகவினர் விளக்க வேண்டும் என்றார் காட்டமாக.

முன்னதாக, திமுக உறுப்பினர் ஜே.அன்பழகன் பேசுவதற்கு சபாநாயகர் கொடுத்த கால அவகாசம் போதாது என்று கூறி திமுகஉறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+