ஊட்டி மலை ரயில் தடம்புரண்டது
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் சென்ற மலை ரயில் கல்லார் அருகே விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள்அனைவரும் உயிர் தப்பினர்.மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மலை ரயிலில் தினசரி நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்வர்.
ஊட்டி மலை ரயில், செவ்வாய்க்கிழமை காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து கிளம்பியது. கல்லார் ரயில்நிலையத்தை அடைந்ததும் அங்கிருந்து கிளம்பியது.
சிறிது தூரம் சென்ற நிலையில், ரயிலின் ஒரு சக்கரம் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதையடுத்து உடனடியாக ரயிலைஓட்டுநர் நிறுத்தி விட்டார். இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ரயிலிலிருந்து இறக்கப்பட்ட பயணிகள் அனைவரும் பேருந்துகள் மூலம் ஊட்டிக்குச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications