குடி மூலம் ரூ.5,795 கோடி: ஓபி பெருமிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை நிலையங்கள் மூலமாக அரசுக்கு இந்த ஆண்டு ரூ. 5,795 கோடி வருவாய் கிடைக்கும் என்றுபொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அதிமுக உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கேட்ட கேள்விக்கு பன்னீர் பதிலளிக்கையில்,
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் தற்போது மது விற்பனை நடந்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும்வருவாய் அதிகரித்து வருகிறது. 2002-03ல் ரூ. 2,996 கோடியும், 03-04ல் ரூ. 3,553 கோடியும், 03-05ல் ரூ. 4,820 கோடியும் மதுவிற்பனை மூலம் வருவாய் கிடைத்துள்ளது.
இந்த அடிப்படையில் 2005-06ல் ரூ. 5,795 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 6,747 மதுபானக் கடைகள் டாஸ்மாக் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் 937 கடைகள்உள்ளன என்றார் ஓ.பி.












Click it and Unblock the Notifications