பணத்துக்கு எம்எல்ஏக்களை வாங்கும் அதிமுக: பாமக தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாமகவிலிருந்து நீக்கப்பட்ட இரு எம்.எல்.ஏக்களை பாமக எம்.எல்.ஏக்கள் என்று கூறி அவர்களை தங்களது கட்சியில்சேர்த்துள்ளதன் மூலம் அதிமுக நாடகமாடுகிறது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றம் சாட்டியுள்ளார்.

பாமகவைச் சேர்ந்த அந்தியூர் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.கிருஷ்ணன் சமீபத்தில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டுஅதிமுகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து தாராபுரம் எம்.எல்.ஏ. சிவகாமி வின்சென்ட், வந்தவாசி எம்.எல்.ஏமுருகவேல்ராஜன் ஆகியோர் திங்கள்கிழமை தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் இணைந்தனர்.

இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது அதிமுகவின் நாடகம். இந்த இருஎம்.எல்.ஏக்களையும் ஏற்கனவே நாங்கள் கட்சியை விட்டு நீக்கி விட்டோம். அவர்கள் மீது நிடவடிக்கை எடுக்குமாறுசபாநாயகரிடம் கடிதமும் கொடுத்தோம்.

ஆனால் இருவர் மீதும் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக அதிமுகசெயல்பட்டது. இரு எம்.எல்.ஏக்களும் கடந்த நான்கு ஆண்டுகளாகவே அதிமுகவுக்கு ஆதரவாகத் தான் செயல்பட்டு வந்தனர்.

அதனால் அவர்கள் மீது பாமக தலைமை நடவடிக்கை எடுத்தது. இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில்இருவரையும் விலைக்கு வாங்கி விட்ட அதிமுக, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சபாநாயகர் மூலம் இருவரையும்தொடர்ந்து பாமக எம்.எல்.ஏக்கள் போல செயல்பட வைத்து வந்தது.

இப்போது இருவரையும் ராஜினாமா செய்யச் சொல்லி கட்சியில் சேர்த்து நாடகமாடுகிறது அதிமுக. இந்த நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள். கூட்டணியை உடைக்க அதிமுக எடுத்து வரும் முயற்சிகள் வீணாகத் தான் போய் முடியும். இந்த விலகலால்பாமகவுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

பணத்துக்காக கட்சி மாறியுள்ள இரு எம்.எல்.ஏக்களையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மீண்டும் தொகுதிக்கு அவர்கள்வந்தால் மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+