ராமதாஸ் போடும் திருமா பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பாமகவின் மாம்பழச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைத்து, சட்டசபையில் பாமகவின் பலத்தைபெருக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மெகா பிளான் போட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழக அரசியல் கட்சிகளிலேயே மிகவும் சாதுரியமாக செயல்பட்டு, ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிடாமல், திமுகஅல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும், மத்திய அமைச்சரவையிலும்குறிப்பிடத்தக்க அளவில் அங்கம் வகித்து சாதனை படைத்த ஒரே கட்சி பாமக மட்டுமே.

வன்னியர் சங்கம் என்ற அமைப்பை பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியாக ஆரம்பித்த நாள் முதல் அக்கட்சிக்குஏறுமுகமாகவே உள்ளது. ஒரு முறை கூட அக்கட்சிக்கு, அரசியல் அரங்கில் தோல்வி ஏற்பட்டதில்லை.

அந்த அளவுக்கு வன்னியர் சமூகத்தினரின் ஏகோபித்த தலைவராக விளங்கி வரும் ராமதாஸ், அரசியல் கணக்குகளைப்போடுவதில் நவீன சாணக்கியராக மாறியுள்ளார். தமிழக அரசியலில் சாணக்கியர் என்று கூறப்படும் திமுக தலைவர்கருணாநிதியையே மிஞ்சி விடும் அளவுக்கு ராமதாஸின் அரசியல் கணக்குகள் அட்டகாசமாக உள்ளன.

கிட்டத்தட்ட கிங் மேக்கர் அளவுக்கு அவர் மாறி விட்டார். பாமகவின் தயவு இல்லாமல் திமுகவோ அல்லது அதிமுகவோஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையில் பாமக படு பலமாக உள்ளதாக அரசியல் வட்டாரத்திலும் பேசப்படுகிறது.

நாம் நினைத்தால் யாரையும் ஆட்சியில் அமர வைக்க முடியும் என்ற அளவுக்கு வன்னியர் சமூக ஓட்டுக்கள் நிலை குலையாமல்,பிரியாமல், கட்டுக்கோப்பாக உள்ளன. அதிமுகவும் பல வன்னியர் தலைவர்களை வைத்து காசு கொடுத்து ஏதாவது ஒரு கட்சியைஆரம்பித்துப் பார்த்தது. ஆனால், தேர்தல்களுக்குப் பின் அந்தத் தலைவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். அந்தக்கட்சிகளும் கரைந்து போய்விட்டன.

இந் நிலையில் வரப் போகிற சட்டசபைத் தேர்தலிலும் தனது அரசியல் பலத்தை நிரூபிக்கும் வகையில், ராமதாஸ் பல திட்டங்களைமுன்கூட்டியே தீட்டிவிட்டார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 20 எம்.எல்.ஏக்களை பெற்றது பாமக. மொத்தம் 27தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி தோல்வியுற்றது. இந்த தேர்தலில் அணி மாறி திமுகவுடன்கூட்டணி அமைத்துள்ளது பாமக.

கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட இரு மடங்கு தொகுதிகளை திமுகவிடம் கண்டிஷனாக கோரியுள்ளது பாமக. இதுவரைதொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் ராமதாஸின் சில மெகா பிளான்கள்கசியத் தொடங்கியுள்ளன.

வரவிருக்கிற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கண்டிப்பாக இடம் பெற்றே ஆக வேண்டும் என்றுகருணாநிதியிடம் ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கு இதுவரை வெளிப்படையாக கருணாநிதி எந்தப்பதிலையும் கூறவில்லை என்றாலும் பாமகவின் கோரிக்கையை அவர் நிராகரிக்க மாட்டார் என்று தெரிகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் மீது திடீரென பாமகவுக்கு ஏன் இவ்வளவு தீவிர அக்கறை என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால்ராமதாஸின் அரசியல் சாதுரியம் இதில் அடங்கியிருப்பதாக விஷயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உருவாக்கினார். முதலில் இந்தஅமைப்பில் ராமதாஸ் இடம் பெறவில்லை. ஆனால் பின்னர் வந்து சேர்ந்து கொண்டார். அவர் வந்த பிறகு இந்த இயக்கத்தைதனது அரசியல் பலத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள சரியான முறையில் உபயோகப்படுத்திக் கொண்டார் ராமதாஸ்.

மேலும், விடுதலைச் சிறுத்தைகளின் ஓட்டு வங்கி இப்போது பாமகவுக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. இதுவும் அவரது அரசியல்நிலைக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. இப்படி ராமதாஸ் செய்ததற்குக் காரணம் வரவிருக்கிற சட்டசபைத் தேர்தலில் பாமகவின்எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை பன்மடங்காக உயர்த்தும் நீண்ட கால நோக்கில் தான் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

ராமதாஸின் கேம் பிளான் இதுதான் .. கடந்த முறை போட்டியிட்ட 27 தொகுதிகளுக்குப் பதில் 40 தொகுதிகள் வரை திமுகவிடம்கேட்பது; விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் சேர்ப்பது; விடுதலைச் சிறுத்தைகளுக்கு சில தொகுதிகளை பாமகவேஒதுக்குவது; அந்த வேட்பாளர்கள் பாமகவின் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடுவது.

இப்படிச் செய்வதன் மூலம் பாமக பிளஸ் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் எத்தனை பேர் வெற்றி பெற்றாலும் அதுபாமகவுக்கே லாபமாக அமையும். விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடுவதால் அவர்களும்பாமக உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.

இதன் மூலம் 30 தொகுதிகளில் இரு கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், அந்த 30 பேருமே பாமகவினராகவேகருதப்படுவார்கள். இதன் மூலம் பாமகவின் பலம் சட்டசபையில் பன்மடங்கு பெருகும், தேவைப்பட்டால் கூட்டணி ஆட்சி கோரிதிமுகவுக்கு நெருக்குதலும் கொடுக்க முடியும் என பாமக தரப்பு கருதுகிறது.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் தற்போது ராமதாஸ், திமுக தலைவர் கருணாநிதியிடம் பேச்சுவார்த்தைகள்மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் சேர்ந்தாலும், அக்கட்சிக்கு திமுக தொகுதிகளைஒதுக்காது, பதிலாக பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளிலிருந்து கொடுக்க வேண்டும் என்று கருணாநிதி ராமதாஸிடம்கூறுவார் என்று தெரிகிறது.

எப்படி நடந்தாலும் அது தனக்குத்தான் லாபம் என்பதால் இதை ராமதாஸும் ஏற்றுக் கொள்வார் என்கிறார்கள் அரசியல்வட்டாரத்தினர். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் சமீப காலமாக விடுதலைச் சிறுத்தைகளுடன் ராமதாஸ் மிகவும்நெருக்கமாக பழகி வருகிறார் என்றும், திருமாவளவனுக்கு சாதகமாக அவர் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு தென் மாவட்டங்களில் ஓரளவுக்கு வாக்கு வங்கிகள் இருப்பதால் தென் மாவட்டங்களிலும்சில தொகுதிகளை ராமதாஸ் கேட்டுப் பெறுவார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்டங்களிலும் மாம்பழத்தைகொண்டு போக அவர் திட்டமிட்டுள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமாவளவன்.பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார். ராமதாஸின் இந்தத் திட்டங்கள் கருணாநிதிக்குத் தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை.

இருந்தாலும், தற்போதைய நிலையில் அவர் அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியையும் பகைத்துக் கொள்ள முடியாதஇக்கட்டான நிலையில் உள்ளார். எனவே கூட்டணிக் கட்சிகள் கோரும் தொகுதிகளை முன்னே பின்னே குறைத்துக் கொண்டுகொடுத்தே ஆக வேண்டிய நிலையில் கருணாநிதி உள்ளார்.

கடந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட தொகுதிகள்: சைதாப்பேட்டை, அண்ணா நகர், செங்கல்பட்டு, அச்சிரப்பாக்கம்,பூவிருந்தவல்லி, திருத்தணி, நாட்ராம்பள்ளி, காட்பாடி, திருப்பத்தூர், செய்யாறு, திருவண்ணாமலை, வந்தவாசி, பண்ருட்டி,விழுப்புரம், சிதம்பரம், சங்கராபுரம், விருத்தாச்சலம், தர்மபுரி, பெண்ணாகரம், சேலம் 2, கபிலர் மலை, தாராபுரம், எடப்பாடி,ஆண்டிமடம், அந்தியூர், ராதாபுரம் ஆகிய தொகுதிகள் ஆகும்.

இந்த முறை வட மாவட்டங்கள் தவிர, தென் மாவட்டங்களிலும் தொகுதிகளை கேட்டு வாங்கவுள்ளது பாமக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+