பாம்பன் பாலத்தில் மோதிய கப்பல்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய கப்பல் பாம்பன் சாலைப் பாலத்தின் மீது மோதியது.
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான 3 சிறிய கப்பல்கள் பாம்பன் வழியாக மங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தன.
அந்த கப்பல்கள் பாம்பன் வந்தபோது ஒரு கப்பலின் மேல் பகுதி சாலைப் பாலத்தின் மீது மோதியது. மேலும் அது பழுதடைந்துநின்றுவிட்டது. இதையடுத்து உதவி கேட்டு கடலோரக் காவல் படைக்கு மாலுமிகள் சகாயம், அந்தோணிராஜ், ராமநாதன்ஆகியோர் தகவல் தந்தனர்.
இதையடுத்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications