சட்டசபையை கலக்கிய திருப்பூர் கட்டபொம்மன்
சென்னை:
திருப்பூர் தொகுதி அதிமுக உறுப்பினர் சிவசாமி, வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியில் பேசியதை, சட்டசபையே குலுங்கிகுலுங்கி ரசித்தது.
சட்டசபையில் இன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசியதிருப்பூர் அதிமக எம்எல்ஏ சிவசாமி அம்மாவை வாழ்த்தியும், மத்திய அரசையும் திமுக கூட்டணியை விமர்சித்தும் வீரபாண்டியகட்டபொம்மன் ஸ்டைலில் பேசினார். இதோ திருப்பூர் கட்டபொம்மனின் வீர வசனங்கள்...யாரைக் கேட்கிறாய் ஓட்டு, எதற்கு கேட்கிறாய் ஓட்டு?
டீசல் விலையை உயர்த்தினாயே, எதற்கு கேட்கிறாய் ஓட்டு, ஏன் கேட்கிறாய் ஓட்டு?
கேஸ் விலையை உயர்த்தினாயே, அரிசி விலையை உயர்த்தினாயே,
ஏன் கேட்கிறாய் ஓட்டு? எதற்கு கேட்கிறாய் ஓட்டு?
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்குத் தடை போடுகிறாயே, எதற்குப் போட வேண்டும் ஓட்டு? ஏன் போட வேண்டும் ஓட்டு?
அன்னதானத் திட்டம் அளித்தாயா?
இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கினாயா?
வீரப்பனை சுட்டு வீழ்த்தியதை குறை சொல்லிய உங்களுக்கு ஏன் போட வேண்டும் ஓட்டு?
எதற்குப் போட வேண்டும் ஓட்டு?
என்று முதல்வரை வாழ்த்தியும் திமுகவை தாழ்த்தியும் சிவசாமி பின்னி எடுத்துக் கொண்டே போக அதிமுக உறுப்பினர்கள்மேசையை தட்டித் தட்டி சந்தோஷித்து ரசித்தனர்.
சீரியஸ் டைமாக போய்க் கொண்டிருந்த சட்டசபையில் சிவசாமியின் பேச்சு காமெடி டைமாக மாறி உறுப்பினர்களை கலகலக்கவைத்தது.












Click it and Unblock the Notifications