போலீசார் வீடுகளில் போலீஸ் சோதனை!!!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
காவலர் தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே வெளியான வழக்கில், மதுரையில் சில போலீஸாரின் வீடுகளில் தனிப்படைபோலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த ஆண்டு காவலர் தேர்வுக்கான வினாத்தாள் இரண்டு முறை முன் கூட்டியே வெளியானது. இதையடுத்து இருமுறையும்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த நடவடிக்கை அறிக்கையில், இந்த முறைகேடு தொடர்பாக ஐ.ஜி. உள்பட 15காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 24 பேர் மீது துறைரீதியான நடவடிக்கைக்குஉத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந் நிலையில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. மெளரியா தலைமையிலான தனிப்படையினர் மதுரையில் முகாமிட்டு 2வதுகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட போலீஸாரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். அவர்களின் வீடுகளிலும் போலீஸார் சோதனைநடத்தினர்.












Click it and Unblock the Notifications