For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒட்டு கேட்கப்பட்ட எம்ஜிஆர்!!: விஜய்காந்திடம் ரகசிய கேசட்!!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி குறித்து முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தெரிவித்த பல ரகசியத் தகவல்களை நேரம் வரும்போதுவெளியிடுவேன் என்று நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவருமான விஜயகாந்த் கூறினார்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி, தே.மு.தி.க சார்பில் சென்னை தங்கசாலை பகுதியில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில்விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

அதில் விஜயகாந்த் பேசியதாவது:

சமீபத்தில் எம்.ஜி.ஆர். பேசிய நான்கு கேசட்டுகள் எனக்குக் கிடைத்தன. அதில் கருணாநிதி குறித்தும், திமுக குறித்தும் பலரகசியங்களை வெளியிட்டுள்ளார். தொழிற்சங்கத் தலைவர் ஒருவருடன் எம்.ஜி. ஆர். பேசுவது போல இந்த கேசட்டில் உள்ளன.

கருணாநிதி குறித்து ஒரு கேசட்டில் எம்.ஜி.ஆர். இப்படிக் கூறுகிறார்: பொதுக்குழுவைக் கூட்டி என்னை வெளியேற்றியிருக்கலாம்.ஆனால் ஏதோ ஒரு கூட்டத்தில் என்னைப் பற்றிப் பேசியதால் நான் வெளியேறினேன்.

கலைஞர் நல்ல தலைவர்தான். ஆனால் மக்கள் வரிப்பணத்தை எடுப்பதிலும் அவர்தான் முதன்மையானவர். 11 மந்திரிகள்லஞ்சம் பெற்றுள்ளனர். அதை மக்களிடம் கொடுக்கச் சொல்லுங்கள். நான் திமுகவுக்கு எதிரி அல்ல, கலைஞருக்கு தெரிந்தததுபதவியும், பணமும்தான்.

கழகம்தான் குடும்பம் என்று அண்ணா சொல்வார். ஆனால் குடும்பமே கழகம் என்று இவர் செயல்படுகிறார் என்று அந்ததொழிற்சங்கத் தலைவரிடம் கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். இந்த கேசட்டுகளில் உள்ள மற்ற ரகசியங்களை நான் நேரம் வரும்போதுவெளியிடுவேன்.

எனது கல்யாண மண்டபத்தை இடிக்கப் போவதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அதுகுறித்து எனக்குக் கவலையில்லை.கஷ்டப்பட்டு சேர்த்த சொத்தை மக்களுக்காக விட்டுக் கொடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கவலைப்பட மாட்டேன்.

ஆனால் இங்கு ஒரு அமைச்சர் (டி.ஆர்.பாலு) பல கப்பல்களை வைத்துள்ளார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஒருமீன் பிடி படகையாவது அவரால் கொடுக்க முடியுமா? இல்லை கொடுக்கத்தான் அவருக்கு மனம் வருமா? என்னை ஒழிக்கநினைத்தால் அது நடக்காது, யாராலும் அது முடியாது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 2 கட்சிகளுக்கு மாறி மாறி வாய்ப்பு அளித்து விட்டீர்கள். எங்களுக்கு ஒரு முறை வாய்ப்புதந்து பாருங்கள். லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்கி காட்டுகிறேன். கிராமங்களை நகரங்களாக மாற்றுவோம், வறுமை,வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்படும். ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு வந்து சேரும் என்றார் விஜயகாந்த்.

போக்குவரத்து வசதிக்காக தனது கல்யாண மண்டப இடிப்பை மேற்கொள்ளும் தேசிய நெடுஞ்சாலைத்துறையைத் தடுக்க அதன்அமைச்சரான டி.ஆர். பாலுவும், கருணாநிதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெரும் கோபத்தில் இருக்கிறார்நாட்டுக்காக எல்லாவற்றையும் இழக்கத் தயார் என்று சொல்லும் விஜய்காந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X