சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்
சென்னை:
மழை, வெள்ளத்தின்போது அடித்துச் செல்லப்பட்டதாக கருணாநிதி கூறிய ஐந்து பாலங்களும் நல்ல நிலையில்தான் உள்ளன என்றுசட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்துப் பேச முற்பட்ட திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பார்வர்ட் பிளாக் உறுப்பினர் எல்.சந்தானம் பேசினார். அப்போது குறுக்கிட்டுப்பேசிய முதல்வர் ஜெயலலிதா,
கரூர் அமராவதி பாலம் இடிந்து போய் விட்டதாக வழக்குப் போட்டுள்ளார்களே, இதே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்கட்டப்பட்ட கடலூர் சிங்காரத்தோப்பு பாலம் உள்ளிட்ட ஐந்து பாலங்கள் கடலில் அடித்துப் போய் விட்டதே, இதற்காக யார் மீதுவழக்குப் போடுவது என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் கூறிய கடலூர் சிங்காரத்தோப்பு பாலம் இன்னும் அப்படியேதான் உள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், கடந்தஆண்டு சுனாமி அலைத் தாக்குதலின்போது இந்தப் பாலத்தின் வழியாகத்தான் 5,000 பொதுமக்கள் காப்பாற்றப்பட்டுமீட்கப்பட்டனர்.
இதே நிலையில்தான் கல்லார் பாலம், அக்கரைப்பேட்டை பாலம் உள்ளிட்ட மற்ற நான்கு பாலங்களும் உள்ளன. அத்தனைபாலங்களும் கடலில் கரைந்து போகாமல், உடைந்து போகாமல், அடித்துக் கொண்டு போய் விடாமல் அப்படியே நின்றுகொண்டுதான் இருக்கின்றன.
தொடர்ந்து உண்மைக்குப் புறம்பாக பேசி வரும் கருணாநிதி, மக்களை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம் என்றார்.
பின்னர் தொடர்ந்து சந்தானம் பேசினார். அப்போது குறுக்கிட்ட திமுக துணைத் தலைவர் துரைமுருகன், முதல்வர் பேசியதற்குப்பதிலளிக்க தனக்கு அனுமதி தருமாறு கோரினார்.
ஆனால் அதை சபாநாயகர் ஏற்கவில்லை. தொடர்ந்து தனது கோரிக்கையை துரைமுருகன் வலியுறுத்திய நிலையில் அவரைசபையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு காளிமுத்து உத்தரவிட்டார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்களையும் வெளியேற்ற உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திமுகஉறுப்பினர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள்வெளிநடப்புச் செய்தனர்.












Click it and Unblock the Notifications