234 தொகுதிகளிலும் வெல்வோம்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மெட்ரோ ரயிலை நிராகரித்து விட்டு மோனோ ரயில் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது பல்வேறு முரண்பாடுகளை வெளிக்காட்டுகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதலில் சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைஅறிவித்தார்கள். பின்னர் அதை நிராகரித்து விட்டு இப்போது மோனோ ரயில் என்கிறார் ஜெயலலிதா.

யாரோ தனி நபர் ஆதாயம் பெறும் வகையில் மோனோ ரயில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் எந்த அடிப்படையில்நிராகரிக்கப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும். மோனோ ரயில் எந்த வகையில் ஆதாயம், யாருக்கு ஆதாயம்என்பதையும் விளக்க வேண்டும்.

இப்போது பாமக மீது பாய ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. எப்படியாவது அந்த அணியில் எங்களை வளைத்து போட முயற்சிசெய்தார். ஆனால் நாங்கள் வளைந்து கொடுக்கவில்லை. தற்போது அபாண்டமான பழிகளை சுமத்தி வருகிறார்.

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக மத்திய அமைச்சர் அன்புமணிக்கு 2 கடிதங்கள் எழுதியதாக பொய்யானதகவல்களை கூறியுள்ளார். ஆனால் பொறுப்பற்ற யாரோ ஒருவர் மூலம் அன்புமணிக்கு நினைவூட்டல் கடிதங்கள் மட்டுமேஅனுப்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த ஆண்டு வரை நுழைவு தேர்வு இல்லை. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள்என்ஜினியரிங், மருத்துவ கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதை தமிழக அரசு ஆய்வு செய்திருக்கலாமே.அதைவிட்டு மோசமான பொய்களை சொல்வதன் மூலமாக மக்கள் மத்தியில் ஜெயலலிதா அனுதாபத்தைத் தேட முடியாது.

3 எம்எல்ஏக்களை ஆசை காட்டி கொண்டு சென்றதன் மூலம் எங்களை பலவீனப்படுத்த முடியாது. தலித் மக்களுக்காக போராடுகிறகட்சி பாமக என்று தலித் மக்களே சொல்வார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியை எங்கள் கட்சியில் சேர்க்க முயற்சி எடுத்துவருகிறேன்.

வரும் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிஅமைந்தாலும் அமைச்சரவையில் நாங்கள் சேர மாட்டோம். புதுவையிலும் இந்த நிலை தொடரும். வெளியில் இருந்து ஆதரவுதருவோம் என்றார் ராமதாஸ்.

ராமதாசின் இந்த அறிவிப்பு காங்கிரசுக்கு பெருத்த அடியாக விழுந்துள்ளது. தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சி தான் அமையவேண்டும் என திமுகவை காங்கிரஸ் நெருக்கி வருகிறது. இதை திமுக ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் பாமக கருத்துத்தெரிவிக்காமல் இருந்து வந்தது. இதனால் பாமகவின் நிலை குறித்து திமுகவில் குழப்பம் நிலவியது.

இப்போது கூட்டணி ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என ராமதாஸ் அறிவித்துவிட்டதால், காங்கிரசின் கோரிக்கைக்குஆதரவில்லாமல் போய்விட்டது. இதனால் அக் கோரிக்கையை மண்ணில் புதைக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ்தள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+