ஹைதராபாத்தில் நாளை காங். மாநாடு துவக்கம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

ஆந்திர தலைநகர் ஹைதராபாத் காச்சி பவுலி ஸ்டேடியத்தில் காங்கிரஸ் கட்சியின் 82வது மாநாடு நாளை துவங்குகிறது.

இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், மாநிலத்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதையொட்டி ஹைதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் மாநாட்டிற்காக ஹைதராபாத் வரும் கட்சித் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்படஉள்ள உணவுக்கான ஸ்பெஷல் மெனு தயார் செய்யப்பட்டுள்ளது. காலை உணவாக சோனியாவுக்கு இட்லி, தோசை, ஊத்தப்பம்,கார்ன் ப்ளேக்ஸ் மற்றும் பால் கொடுக்கப்பட உள்ளன. இவற்றுடன் சட்னி மற்றும் சாம்பார் வழங்கப்படும்.

மதிய மற்றும் இரவு உணவாக மூன்று வித ரொட்டி, சாதம், சாம்பார், கத்திரிக்காய், பீன்ஸ், கோழிக்கறி, மீன், பச்சைக் காய்கறிமற்றும் பழ வகைகளை சோனியா ருசிக்க இருக்கிறார். இத்தாலிய உணவு வகைகள் சிலவும் அவருக்கு வழங்கப்பட உள்ளன.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்படும் உணவுக்கான மெனுவில் முக்கியமாக புதினா மற்றும் பசலைக் கீரையுடன் கூடியமூன்று வித பஞ்சாபி ரொட்டிகள் இடம் பெறுகின்றன. கூடவே நாண் மற்றும் பரோட்டாவும் உண்டு.

நாளை (சனிக்கிழமை) துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. மாநாட்டில்பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கலை விருந்து அளிக்க உள்ளனர்.

மாநாட்டு துவக்க நாளான நாளைய நிகழ்ச்சியில் பிரபல சினிமா பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் சைய்யசைய்ய புகழ் பாடகர் சுக்விந்தர் சிங் ஆகியோர் பாடுகின்றனர்.

மாநாட்டின் நிறைவு நாளான 23ம் தேதி மாலையில் சினிமா கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பல்வேறுபாலிவுட் நட்சத்திரங்களும், தெலுங்கு சினிமா நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலை விருந்து அளிக்கஉள்ளனர்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திக்விஜய் சிங், அகமது பட்டேல் மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

மாநாட்டில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+