கல்லூரிக்குள் மாணவி கொலை: தண்டனை பெற்ற 4 பேர் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மாணவி கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டசம்பவத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் கடந்த 1991ம் ஆண்டு மாணவி ராஜேஸ்வரி என்பவர் கல்லூரிவளாகத்தில் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், குண்டு ரவி, முருகன், குட்டி உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர்.இவர்களில் குண்டு ரவிக்கு ஆயுள் தண்டனை, முருகன், குட்டிக்கு 10 ஆண்டு சிறை மற்றும் இன்னொருவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்சதாசிவம், பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்திற்கு போதியஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்யவில்லை.

சாட்சிகள் எதுவும் சரியில்லை. எனவே போதுமான ஆதாரங்கள் இல்லாததை குற்றவாளிகளுக்கு சாதகமாக்கி அவர்களைவிடுதலை செய்வதாக தீர்ப்பளித்தனர்.

இந்த கொலைச் சம்பவத்தில் தண்டனை பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+