அரசு வேலை நியமன தடை நீக்கம், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அள்ளிக் கொடுக்கும் ஜெ
சென்னை:
அரசு வேலைக்கு ஆளெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடை ஆணை முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படுவதாக முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
மேலும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் (டியர்னஸ் அலவன்ஸ்) 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன்இணைப்பதாகவும் அறிவித்தார்.அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு வேலைக்கு ஆள் சேர்க்க தடை விதித்தார் முதல்வர் ஜெயலலிதா. இப்போது ஆட்சி முடிந்துதேர்தல் நடக்கவுள்ள நிலையை இந்தத் தடையை நீக்குவதாக இன்று அறிவித்துள்ளார்.
சட்டசபையில், ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதாஇன்று பேசினார். அப்போது,
கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்களின் பேராதரவோடு இந்த அரசு வெற்றி நடை போட்டுவருகிறது. அரசின் திட்டங்களை அரசு அதிகாரிகளின் சிறந்த ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறேன்.
அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் ரூ. 1,200 கோடியில் பல சலுகைகளை அளிக்கஉத்தரவிட்டுள்ளேன்.
அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் (டியர்னஸ் அலவன்ஸ்) 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும்.
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, முந்தைய அரசின் அஜாக்கிரதையான போக்கினால் நிதி நிலைமை மிகவும் மோசமாகஇருந்தது. அந்த நிலையில் அரசை திறம்பட நடத்துவதற்காக அரசு வேலைக்கு நேரடியாக நியமனம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இருப்பினும் தேவைக்கேற்ப, நிதி நிலைக்கேற்ப நீதித்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல துறைகளில் வேலைக்கு ஆள்எடுப்பதற்கு அவ்வப்போது தடை நீக்கப்பட்டு வேலை நியமனம் நடந்து வந்தது.
தற்போது அரசின் நிதி நிலை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதால், வேலை நியமனத் தடை ஆணையை முற்றிலும் விலக்கஉத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் இளைஞர்கள் பெருமளவில் அரசு வேலையில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை தகுதியுள்ளஇளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வரலாறு காணாத கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டேன். நானும்பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்து பணிகளை முடுக்கி விட்டேன்.
நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசிடம் ரூ. 13,685 கோடி நிதியை ஒதுக்குமாறு பலமுறை கோரியும்இதுவரை ரூ. 1,000 கோடியை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
சிலரின் முட்டுக்கட்டை காரணமாக நிவாரண நிதி கிடைப்பதில் தாமதம் நிலவி வருகிறது. மத்திய அரசு வழங்கிய ரூ. 1000கோடியை விட கூடுதலாகவே, அதாவது ரூ. 1,116 கோடியை நாங்கள் செலவிட்டுள்ளோம்.
குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்களின் பேராதரவோடு இந்த அரசு வெற்றி நடை போட்டுவருகிறது. அரசின் திட்டங்களை அரசு அதிகாரிகளின் சிறந்த ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறேன்என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 1.3 லட்சம் பேரை இரவோடு இரவாக வேலை நீக்கம் செய்ததும் அதிமுக அரசு தான்.ஊழியர்களை வீடு புகுந்து கைது செய்தது, வீட்டைக் காலி செய்யச் சொல்லி அரசு ஊழியர்களின் குடும்பத்தினரை மிரட்டியது எனபல வகைகளிலும் அரசுக்கும் ஊழியர்களுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு நிலவியது நினைவுகூறத்தக்கது.
அரசு வேலைக்கு ஆளெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடை ஆணையை விலக்கக் கோரி மாதத்துக்கு ஒரு முறையாவது ஏதாவது ஒருபோராட்டத்தை நடத்தியபடியே இருந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.












Click it and Unblock the Notifications