For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று 32 இலங்கை அகதிகள் தமிழகம் வருகை

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து இன்று ஒரே நாளில் 32 தமிழகர்கள் அகதிகளாக தமிழகம்வந்துள்ளனர். தொடர்ந்து பல அகதிகள் படகுகளில் வந்து கொண்டிருப்பதாகராமேஸ்வரம் வந்த அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் போர் அபாயம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு ராணுவத்தின்கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பல துயரங்களுக்குஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

வீட்டோடு சேர்த்து மக்களை எரிப்பது, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதுஎன இலங்கை ராணுவம் அட்டூழியம் செய்து வருகிறது.

இதையடுத்து மக்கள் அகதிகளாக தமிழகம் வரத்தொடங்கியுள்ளனர்.

கடந்த 12ம தேதி முதல் அகதிகள் வருகை தொடங்கியது. தினசரி 5 பேர், முதல் 10 பேர்வரை அகதிகள் வந்தவண்ணம் இருந்தனர்.

இந் நிலையில் இன்று ஒரே நாளில் 32 பேர் அகதிகள் தமிழகத்தில் தஞ்சம்புகுந்துள்ளனர்.

அரிச்சமுனை பகுதிக்கு வந்த இவர்களை போலீஸார் தனுஷ்கோடி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நிடத்தினர். அதன் பின்னர் அவர்கள்மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

ராமேஸ்வரம் வந்துள்ள அந்த அகதிகள் கூறுகையில், இலங்கை ராணுவத்தின்அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்ப் பெண்களைக்கற்பழிப்பதும், சிறுவர்களை கொடூரமாக அடித்துக் கொலை செய்வதுமாக சிங்களராணுவம் வெறியாட்டம் போட்டு வருகிறது.

இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காக நூற்றுக்கணக்கான தமிழர்கள்,தமிழகத்திற்கு வரக் காத்துள்ளனர். எங்களைப் போல மேலும் பலரும் படகுகளில்வந்து கொண்டுள்ளனர் என்றனர்.

இதுவரை மொத்தம் 106 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நளினியுடன் ஆரித்ரா மீண்டும் சந்திப்பு:

இதற்கிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் மற்றும் நளினியை அவர்களது மகள்ஆரித்ரா மீண்டும் சந்தித்துப் பேசினார்.

வேலூர் மத்திய சிறையில் முருகனும், மகளிர் சிறையில் நளினியும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது மகள் ஆரித்ரா, 9 வருடஇடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் இலங்கையிலிருந்து வேலூர் வந்து தாய், தந்தையைப் பார்த்தார்.

3 மாத விசாவில் தமிழகம் வந்துள்ள ஆரித்ரா, நளினி மற்றும் முருகனின் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளார். இந் நிலையில்வியாழக்கிழமை மீண்டும் சிறைக்கு வந்த அவர் தனது தாய், தந்தையை சந்தித்துப் பேசினார்.

ஆரித்ராவுடன் நளினியின் தாயார் பத்மா, முருகனின் தங்கை கோகிலா ஆகியோரும் வந்திருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X