• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

திமுக இல்லாவிட்டால் அதிமுக: மதிமுக முடிவு!

By Staff
|

சென்னை:

தேர்தல் நெருங்கும் வரை கூடவே வைத்துக் கொண்டு, கடைசி நேரத்தில் வெளியே துரத்தி விட்டால், நாங்கள் தனித்து நிற்போம்,ஒன்றுமில்லாமல் போவோம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது இந்த முறை நடக்காது. நாங்கள் தனித்து நிற்கமாட்டோம் என மதிமுக கூறியுள்ளது.

சென்னை தாம்பரத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில், திமுக மற்றும் பாமகவை மறைமுகமாக மிகக் கடுமையாகத் தாக்கிப்பேசினார் அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.

வைகோவின் மனசாட்சி என்று கூறப்படும் சம்பத் பேசுகையில், சேலத்தில், விழுப்புரத்தில் மட்டுமே இருக்கும் கட்சியெல்லாம்(பாமக) தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று மார் தட்டிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. திண்டிவனத்தில் இருக்கும் கட்சிதிருநெல்வேலியில் இருக்காது.

ஆனால், நாங்கள் கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை இருக்கிறோம். தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் கட்சியாகமதிமுக விளங்குகிறது. மக்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல மரியாதை உள்ளது. அடாவடி செய்யும் கட்சி அல்ல நாங்கள், எந்தக்காரணத்தாலும், யாரையும் நாங்கள் மிரட்டிப் பிழைப்பதில்லை.

(இதுவரை பாமகவை திட்டினார், இனிமேல் திமுக) தேர்தல் நெருங்கும் வரை கூடவே வைத்துக் கொண்டு, கடைசி நேரத்தில்வெளியே துரத்தி விட்டால், நாங்கள் தனித்து நிற்போம், ஒன்றுமில்லாமல் போவோம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அதுஇந்த முறை நடக்காது. நாங்கள் தனித்து நிற்க மாட்டோம்.

சட்டசபைக்குள் நுழைய ரயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்து விட்டோம். எந்த கோச் என்பதுதான் தெரியாது. ஆனால், நிச்சயம்ஏதாவது ஒரு கோச்சில் ஏறி வந்து விடுவோம். (ஒரு வேளை வெயிட்டிங் லிஸ்ட் பேசஞ்சரோ?)

தருவதை வாங்கிக் கொள் என்று இனிமேல் பிச்சை போட முடியாது. பிச்சையை வாங்கவும் மாட்டோம். எதிர்க்கட்சித் தலைவர்வைகோ என்ற அந்தஸ்து கிடைக்கும் அளவுக்கு தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். 19 மாத சிறைவாசத்திற்கு என்னபலன் கிடைத்தது? கூட்டணியில் ஐந்து சீட்டாக இருந்தது, நான்காகக் குறைந்தது. இதுதான் எங்களுக்குக் கிடைத்த பரிசு.

எங்களுக்கு யார் மீதும் கோபம் இல்லை. ஆனால் எங்களை ஏமாற்ற நினைப்பவர்களை ஏமாற்றும் சக்தியாக நாங்கள்வளர்ந்துள்ளோம் என்பதை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் (திமுக) புரிந்து கொண்டால் நல்லது. எத்தனை நாட்களுக்குத்தான்நாங்கள் மட்டுமே ஏமாந்து கொண்டிருப்பது? என்று ஆவேசமாக பேசினார் நாஞ்சில் சம்பத்.

வைகோ சொல்ல நினைப்பதைத் தான் திமுகவுக்கும் பாமகவுக்கும் சம்பத் கூறியிருக்கிறார் என்கிறார்கள். தனித்து நிற்க மாட்டோம்என்று கூறியுள்ளதன் மூலம் திமுக இல்லாவிட்டால் அதிமுகவுடன் கூட்டணி சேருவோம் என்பதை மதிமுக தெளிவுபடுத்தியுள்ளதுஎன அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

எல்.கணேசன் பேட்டி:

இதற்கிடையே மதிமுகவின் அவைத் தலைவர் எல்.கணேசன் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் திமுகவுக்கு மறைமுகமாகஎச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது பேட்டி:

கேள்வி: சட்டசபைக்குள் நுழைந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்குள் பல்லைக் கடித்துக்கொண்டு உள்ளது மதிமுக என்கிறார்களே?

பதில்: இப்போதைய சூழ்நிலையில் திமுக கூட்டணியில் மதிமுக இருப்பதில் எந்தவித நெருடலும் இல்லை. ஆனால் எத்தனைதொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் என்று பேச்சுவார்த்தை வரும் போது மன வருத்தம் வரத் தான் செய்யும்.

கேட்பது எங்கள் உரிமை, தருவது திமுகவின் கடமை. இதை அனுபவசாலியான கருணாநிதி சமாளிப்பார் என்பது என்னுடையநம்பிக்கை.

கே: கூட்டணியில் மதிமுகவுக்கு கெளரவமான இடம் வேண்டும் என்று வைகோ சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகநினைக்கிறீர்களா?

ப: நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்களும் அல்ல, கலைஞர் ஒன்றும் புரவலரும் அல்ல. எங்களின் கெளரவம் எவ்வளவு என்றுகருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்.

கே: மதிமுக ஓ நெகடிவ் போன்றது, எதில் வேண்டுமானாலும் சேரும் என்று கூறியுள்ளாரே வைகோ?

ப: எங்களுக்கு வேறு நாதியே கிடையாது என யாரும் கருதிவிடக் கூடாது என்பதற்காக அப்படி சொல்லியிருக்கலாம், மதிமுகவின்நேர்மையை வைத்து அதை யாரும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காக அப்படி சொல்லியிருக்கலாம். இதை வைத்துஅனாவசியமாக சிண்டு முடிய வேண்டாம்.

கே: சன் டிவி குறித்த மதிமுகவின் அதிருப்தி இன்னும் அப்படியே தான் உள்ளதா?

ப: எங்களை சன் டிவி இருட்டடிப்பு செய்கிறது என்ற வருத்தம் மதிமுக தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் உண்டு.

கே: வைகோவையும் விஜய்காந்தையும் இணைத்துப் பேசி, மதிமுக மீது சாதிச் சாயம் பூசப்படுவது குறித்து?

ப: வைகோவும், விஜயகாந்தும் ஒரே இனமாக இருக்கலாம், ஆனால், வைகோ இந்த இனத்தவர் என்று இன்னமும் பலருக்குத்தெரியாது. வைகோ அப்படிப்பட்ட உணர்வுகளையெல்லாம் கடந்த ஒரு தலைவர். ஒரு வேளை விஜயகாந்தால் பாதிப்பு ஏற்படும்என்றால் அது எங்களுக்கு மட்டும் இல்லை. எல்லா கட்சிகளுக்கும் தான் ஏற்படும். பாதிப்பு இல்லாவிட்டால் எங்களுக்கும்ஏற்படாது.

இவ்வாறு இல.கணேசன் கூறியுள்ளார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X