அரசு ஊழியர்கள் ஏமாற மாட்டார்கள்: திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்துடன், 50 சதவீத அகவிலைப்படி உயர்வை இணைப்பதாக முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளதைக் கேட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாந்து விட மாட்டார்கள் என திமுக உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

இதுகுறித்து சட்டசபை திமுக துணைத் தலைவர் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் கூறுகையில்,

கடந்த ஐந்து ஆண்டுகாலமாக பறித்து வைத்திருந்த பல்வேறு சலுகைகளை வழங்காமல், இப்போது தேர்தல் வருவதைக் கருத்தில்கொண்டு சில சலுகைகளை திடீரென ஜெயலிலதா வழங்கியுள்ளார். இதைக் கண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாந்து விடமாட்டார்கள். வரும் தேர்தலில் தக்க பாடம் கற்பிப்பார்கள் என்றனர்.

பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையல், இது வெறும் கண்துடைப்பு, ஏமாற்று வேலை. பறித்துக் கொண்ட சலுகைகளைத்திருப்பித் தராமல் ஊதியத்துடன் 50 சதவீத அகவிலைப்படியை இணைத்திருப்பது ஏமாற்று வேலை. அரசு ஊழியர்கள் இதைக்கண்டு ஏமாந்து விடக் கூடாது என்றார்.

இதேபோல கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் முதல்வரி தேர்தல் கால அறிவிப்பை விமர்சித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+