அடிதடிக்கு முயன்ற பாமக, அதிமுக எம்எல்ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் பாலாற்று அணை தொடர்பாக நடந்த வாக்குவாதம் முற்றி பாமக எம்எல்ஏவுக்கும், அதிமுக எம்எல்ஏவுக்கும்இடையே அடிதடி மோதல் நடக்கும் சூழல் ஏற்பட்டது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக சட்டசபையில் பாமக எம்எல்ஏ ஜிகே மணிபேசும்போது, கர்நாடகாவில் அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக உள்ளனர். அவர்கள் தமிழக தலைவர்களின் உருவபொம்மைகளை கொளுத்துகிறார்கள். அவர்களை போல இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து ஒற்றுமையாகநிற்க வேண்டும் என்றார்.

அப்போது பாஜக எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் குறுக்கிட்டு, அங்கு ஒற்றுமையாக இருப்பது போல் தமிழகத்தில் நாம்அனைவரும் ஒன்று சேர்ந்து பிரதமரின் கொடும்பாவியை எரிக்கலாமா? என்று கேட்டார்.

அப்போது எழுந்த பாமக எம்எல்ஏ வேல்முருகன் எழுந்து, ஜெகவீரபாண்டியனை நோக்கி முன்னேறியபடி, அவரைத் திட்டினார்.அப்போது வேல்முருகனுக்கு முன்னாள் இருந்த மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏவான வாசுதேவன் அவரைக் கண்டித்தார்.

இதையடுத்து வேல்முருகன், வாசுதேவன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள பாய்ந்தனர். அருகில் இருந்த மற்ற எம்எல்ஏக்கள் அவர்களைத் தடுத்து விலக்கி விட்டனர்.

இதையடுத்து பாமக எம்எல்ஏக்கள் பாலாற்று பிரச்சினையை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது சற்று அமைதி உண்டானது. அந்த நேரத்தில் எங்கிருந்தோ மியாவ் என்று பூனை கத்தும் சத்தம் ஒன்று வந்தது. யாரோஒரு எம்எல்ஏ தான் அந்த சவுண்டை விட்டதாரா அல்லது உண்மையிலேயே பூனை உள்ளே வந்ததா என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+