இந்திய ராணுவ உதவி தேவையில்லை: இலங்கை அமைச்சர்
சென்னை:
தற்போதைய சூழ்நிலையில் இந்தியா தார்மீக ஆதரவு மட்டும் அளித்தால் போதும். ராணுவ ரீதியிலான உதவி உள்ளிட்ட வேறுஎந்த உதவியும் இலங்கைக்கு இப்போது தேவையில்லை என்று அந்நாட்டு அரசியல் விவகாரத்துறை அமைச்சர் குணசேகராகூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவின் தார்மீக ஆதரவை மட்டுமே இலங்கை தற்போதுஎதிர்நோக்கியுள்ளது. இலங்கை இனப் பிரச்சினை தீர இந்தியா தனது தார்மீக ஆதரவை முழுமையாக அளிக்க வேண்டும்.ராணுவ உதவி உள்ளிட்ட வேறு உதவிகளை நாங்கள் எதிர்நோக்கியிருக்கவில்லை. தற்போது இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் மற்றும் நார்வே தூதுக்குழு ஆகியோருக்கிடையே நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில், நார்வே நாட்டுக்குப்பதில் இந்தியாவை சேர்க்கவும் நாங்கள் விரும்பவில்லை.
அரசியல் ரீதியாக சுமூகத் தீர்வு ஏற்படுவதற்கு இந்தியா முழு அளவில் உதவ வேண்டும். இலங்கை பிளவுபடக் கூடாது என்றஎண்ணம் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டால் போதும்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கு வந்தது, நல்லெண்ண பயணம் தான். ராணுவ உதவி கோரி அவர் வரவில்லை. அதேபோல, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்திக்காமல் தவிர்த்ததற்கும் விசேஷ காரணம் எதுவும் இல்லை.
முதல்வரை சந்திக்க அதிபர் ராஜபக்ஷே மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால் நேரமின்மை காரணமாக அவரால் சென்னைக்குவர முடியவில்லை. மேலும், இங்குள்ள அரசியல் சூழ்நிலைகளும் அதற்கு ஒரு காரணம் என்று கூறலாம் என்றார் குணசேகரா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications